சோகத்தில் மூழ்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நட்சத்திரங்கள் – விஜே சித்ரா பிறந்தநாளில் உருக்கம்!

0
சோகத்தில் மூழ்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நட்சத்திரங்கள் - விஜே சித்ரா பிறந்தநாளில் உருக்கம்!
சோகத்தில் மூழ்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நட்சத்திரங்கள் - விஜே சித்ரா பிறந்தநாளில் உருக்கம்!
சோகத்தில் மூழ்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நட்சத்திரங்கள் – விஜே சித்ரா பிறந்தநாளில் உருக்கம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்து சின்னத்திரையில் சிறந்த நடிகையாக இருந்தவர் விஜே சித்ரா. அவர் தற்போது உயிரோடு இல்லை. இந்நிலையில் இன்று (மே 2) அவருடைய 30வது பிறந்தநாள். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் அவருக்கு உருக்கத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சின்னத்திரையில் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி பல சேனல்களில் கொடுக்கப்பட்ட சின்ன சின்ன வேலைகளை செய்து அதன் பின் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக தனக்கொரு தனி இடத்தை பிடித்தவர் விஜே சித்ரா. அவருடைய நடிப்பு மூலமாக பலரது வீட்டில் செல்லப்பிள்ளையாக அவர் இருந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் திடீரென ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறைந்த நடிகை விஜே சித்ராவின் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த காரியம் – இணையத்தில் வைரல்!

அவருடைய மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரின் திடீர் தற்கொலைக்கு காரணம் என்ன என தெரியவில்லை. அவருடன் அன்றைய தினம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் இருந்திருக்கிறார். சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் அவருடைய 30வது பிறந்தநாள் இன்று (மே 2) என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் உருக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

முதலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து, நீ தேவதைகளுடன் உன் பிறந்தநாளை கொண்டாடும் போது உன்னை ஒரு சிறந்த தோழியாக கொண்டதன் நினைவாக நாங்கள் கொண்டாடுகிறோம். நீ இந்த உலகிற்கு வந்த நாளில் நான் நல்வாழ்த்துகளை கொண்டு வந்திருக்கிறேன் என்றும் எங்கள் நினைவில் என பதிவிட்டிருக்கிறார். பின் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் அவருடைய வளைகாப்பு எபிசோடில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்து எங்கே இருக்கடி என பதிவிட்டுள்ளார். மேலும் சின்னத்திரை நடிகை தியா சித்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!