‘சீரியல் பார்ப்பதில்லை’ பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் – நெகிழ்ச்சியில் வெங்கட்!

0
'சீரியல் பார்ப்பதில்லை' பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் - நெகிழ்ச்சியில் வெங்கட்!
'சீரியல் பார்ப்பதில்லை' பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் - நெகிழ்ச்சியில் வெங்கட்!
‘சீரியல் பார்ப்பதில்லை’ பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் – நெகிழ்ச்சியில் வெங்கட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் தனது ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் வெங்கட்:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சாக்லேட் பாயாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். அவர் பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் சன் டிவி ரோஜா சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மறைந்த விஜே சித்ரா நடிப்பில் “கவலை வேண்டாம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் வருத்தம்!

இந்த இரண்டு சீரியல்களும் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியல்கள் தான். ஆனால் வெங்கட் ரோஜா சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வெங்கட் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளராக சென்றிருந்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் கூட்டமாக கூடினார்கள். அவர்களை சமாளிக்க முடியாமல் வெங்கட் திணறினார்.

பிக்பாஸ் வீட்டில் ராஜு உடன் அடிக்கடி சண்டையிட்ட அபிநய் ? ரசிகர்களின் கேள்விக்கு பதில்!

அப்போது ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நன்றாக நடித்து வருகிறீர்கள். ஆனால் ரோஜா சீரியலில் இருந்து ஏன் விலகிடீங்க நாங்க உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். நீங்க விலகியது முதல் நாங்க சீரியல் பார்ப்பதை நிறுத்தி விட்டோம் என சொல்ல, அவர்களது அன்பை பார்த்து வெங்கட் ஆச்சர்யம் அடைந்தார். மேலும் தனது ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அவர் ரோஜா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொன்ன பின்னால் கூட அடிக்கடி என்னிடம் இது பற்றி கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!