விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் பதிவிட்ட புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கண்ணன் பதிவிட்ட புகைப்படம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் பதிவிட்ட புகைப்படம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் சீரியல் கதாபாத்திரங்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகளின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கிறது. சொந்தமாக கடை கட்டி அதை பிரமாண்டமாக திறக்க இருக்கின்றனர். பல கஷ்டங்களையும், போராட்டங்களையும் தாண்டி புதிய கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அதற்காக குடும்பமே சேர்ந்து சொந்தங்களை அழைத்து இருக்கின்றனர். மேலும் கடைக்கு அலங்காரம் செய்வது முதல் மேள தாளம் வரை அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி ஸ்டாலினுக்கு நடந்த அடுத்த சோகம் – மாமியார் மரணம்! ரசிகர்கள் ஆறுதல்!

குடும்பத்தினர் அனைவரும் கடை திறப்பு விழாவில் எந்த உடை அணிய இருக்கின்றனர் எப்படி எல்லாம் கோலம் போட வேண்டும் என பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளைய எபிசோடில் கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அதனால் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் நாளைய எபிசோட் இருக்கும். பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருவதே இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் ஆகும்.

“பாரதி கண்ணம்மா” அருணுடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை – வைரலாகும் புகைப்படம்!

கடைசி தம்பி கண்ணனால் சீரியலில் பல திருப்பங்கள் வந்த நிலையில் இந்த ஒரு நிகழ்ச்சியால் ஏகப்பட்ட சந்தோசங்கள் வர இருக்கிறது. மூர்த்தி கண்ணனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் படப்பிடிப்பிற்கு முன்னதாக எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!