‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு எதிராக மீனாவை தூண்டி விடும் ஜனார்த்தனன் – சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்திற்கு எதிராக மீனாவை தூண்டி விடும் ஜனார்த்தனன் - சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்திற்கு எதிராக மீனாவை தூண்டி விடும் ஜனார்த்தனன் - சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு எதிராக மீனாவை தூண்டி விடும் ஜனார்த்தனன் – சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையில் ஜீவா தான் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று மூர்த்தியிடம் பேச சொல்லி மீனாவை ஜனார்த்தனன் தூண்டி விடுவது போல அடுத்தகட்ட கதைக்களம் அமைய இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கூட்டு குடும்ப வாழ்க்கையை அழகாக சித்தரித்து வருவதால் இதற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் குடும்பப்பாங்கான கதைக்களத்திற்கு பெயர் போன இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக புதிய கடையை மீட்டுள்ளனர் மூர்த்தி குடும்பத்தினர்.

பிறந்தநாள் விழாவில் லஷ்மிக்கு பாரதி கூறிய உண்மை, ஆனந்தத்தில் குடும்பத்தினர் – அடுத்த வார எபிசோட்!

தொடர்ந்து திட்டமிட்டபடி பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு திறப்பு விழா நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜனார்த்தனன், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைக்கு ஜீவா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மீனாவை தூண்டி விட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தான் அடுத்தகட்ட கதைக்களம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

DNA டெஸ்ட் எடுத்த பாரதி, முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வெண்பா சொல்வது என்ன?

அதாவது, அண்ணன் தம்பிகள் சேர்ந்து கட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் ஜீவா தான் கல்லாவில் உட்கார வேண்டும் என்றும், அவர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதனால் மூர்த்தியிடம் சென்று பேசு, இல்லையென்றால் கல்லாவில் கதிர் அல்லது கண்ணனை உட்கார வைத்து விடுவார்கள் என்று மீனாவிடம் பேசுகிறார் ஜனார்த்தனன். மறு பக்கத்தில் கண்ணன் தான் கடையின் கல்லாவில் உட்கார வேண்டும் என்று கஸ்தூரி, ஐஸ்வர்யாவை தூண்டி விட இவர்கள் பேச்சை கேட்டு மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடை விஷயத்தில் பிரச்சனையை உருவாக்கலாம் என்று தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here