‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் காரணமா? சீரியலில் புதிய ட்விஸ்ட்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் காரணமா? சீரியலில் புதிய ட்விஸ்ட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் காரணமா? சீரியலில் புதிய ட்விஸ்ட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் காரணமா? சீரியலில் புதிய ட்விஸ்ட்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன், தம்பிகள் சேர்ந்து கட்டிய புதிய கடையை அதிகாரிகள் சீல் வைத்து விட்டு செல்ல குடும்பத்திற்குள் பிரச்சனைகள் எழுந்திருக்கிறது. இந்த சிக்கலுக்கு காரணம் ஜனார்த்தனன் ஆக இருக்குமோ என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சொல்லக்கூடிய அளவுக்கு, சண்டை பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றாலும் அவ்வப்போது கதையில் ஸ்வாரசியத்தை கூட்டுவதற்காக சில சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு புதிய கடை மூலமாக பிரச்சனைகள் எழுந்துள்ளது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் 4 அண்ணன், தம்பிகள் என்று இருந்து வந்தவர்களுக்கு திருமணம், குழந்தைகள் என கூட்டுக் குடும்பம் பெரிதாகிறது.

பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா – பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!

இது கூட்டு குடும்பம் என்பதால் அவ்வப்போது சில மனஸ்தாபங்கள், சண்டைகள் எழுவது வழக்கம். அதுவும் பெரிய அளவுக்கு பிரச்சனை என்று இல்லாமல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம் ரசிக்கக்கூடிய அளவுக்கு இருப்பதால் வரவேற்புகளை பெற்று வருகிறது. இப்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அண்ணன், தம்பிகள் சேர்ந்து புதிதாக கடை ஒன்று கட்டுகின்றனர். அந்த கடைக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து செல்கின்றனர். எதற்காக இது நடந்தது என்று தெரியாமல் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்கும் கதிர் மற்றும் ஜீவா இருவரையும் அதிகாரிகள் துரத்தி விடுகின்றனர். அதுவும், தெரிந்துதான் கடைக்கு சீல் வைத்தோம். என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அந்த அதிகாரி கூறும் காட்சிகள் கடந்த எபிசோடில் இடம்பிடித்திருந்தது.

பாக்கியாவிற்கு நன்றி சொல்லும் ஈஸ்வரி, அமிர்தா குடும்பத்திடம் தாத்தா பற்றி சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டதற்கு பின்னால் யாரவது இருக்கலாம் என்று சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு எதிராக மீனாட்சி ஸ்டோரை கட்டிய ஜனார்த்தனன் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திரும்ப மீட்கப்படுமா, இந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்த கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here