ஐஸ்வர்யாவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் உருவாகும் புதிய குழப்பம் – மோதிக்கொள்ளும் முல்லை, மீனா!

0
ஐஸ்வர்யாவால் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் உருவாகும் புதிய குழப்பம் - மோதிக்கொள்ளும் முல்லை, மீனா!
ஐஸ்வர்யாவால் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் உருவாகும் புதிய குழப்பம் - மோதிக்கொள்ளும் முல்லை, மீனா!
ஐஸ்வர்யாவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் உருவாகும் புதிய குழப்பம் – மோதிக்கொள்ளும் முல்லை, மீனா!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று முடிவு எடுக்கும் ஐஸ்வர்யாவால், முல்லை மற்றும் மீனாவுக்கு இடையில் சண்டை உருவாவதை போல அடுத்தகட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்த கூட்டுக் குடும்ப கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக வெளியாகி வருகிறது. இந்த கதை வழக்கமான சீரியல்களில் காட்டப்படும் வில்லத்தனம், பழி வாங்குதல், மாமியார் கொடுமைகள் என்று மற்ற சீரியல்களை போல அல்லாமல் ஒரு குடும்பத்தில் நடைபெறும் அன்றாட பிரச்சனைகள், சிறு சிறு சண்டைகளுடன் வெளியாகி கொண்டிருப்பதால் இதற்கு ரசிகர்கள் ஏராளம். இந்த சீரியலில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.

சன் டிவி “ரோஜா” சீரியல் TRP ரேட்டிங்கில் செய்த சாதனை – டாப் 10 இந்திய சீரியல்கள் பட்டியலில் இடம்!

இதனை தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்ததாக ஒரு புதிய குழப்பம் உருவாகியுள்ளது. அதாவது, அடுத்து வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்களத்தில், ஐஸ்வர்யாவை வைத்து முல்லை மற்றும் மீனாவுக்கு இடையே புதிய பிரச்சனை உருவாக இருக்கிறது. இப்போது ஐஸ்வர்யா, காலேஜுக்கு படிக்க போவதில்லை என்று தனத்திடம் கூற படிக்காமல் இருக்க கூடாது என்று தனம் அவருக்கு அட்வைஸ் செய்கிறார். தொடர்ந்து நான் படிக்க போகவில்லை என்று முடிவு செய்து விட்டேன். எதற்கு பாக்கெட் மணி வாங்கிக்கொண்டு காலேஜுக்கு எல்லாம் போகணும்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் புதிய பாக்கியாவாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!

அதற்கு பதிலாக நான் கடைக்கு வேலைக்கு போகிறேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா சொல்வது மீனாவை குத்தி காட்டுவது போல இருக்கவும், என்னால் தான் நீ படிக்க போகவில்லையா என்று ஐஸ்வர்யாவை சத்தம் போடுகிறார் மீனா. இந்த பிரச்சனை இப்படி போய்க்கொண்டிருக்க, மீனா தான் இதற்கு காரணம் என முல்லையும் தன் பங்கிற்கு அவரை குறை கூற இருவருக்கும் இடையே பிரச்சனை நடக்கிறது. இதனை தனம் தடுத்து நிறுத்துகிறார். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் இனி அடுத்த பிரச்சனை ஐஸ்வர்யா மூலமாக உருவாக இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here