
புது கடை திறப்பு விழாவில் மக்கள் கூட்டத்தில் சிக்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு விழா படப்பிடிப்புத்தள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அண்ணன் தம்பிகள் கஷ்டப்பட்டு தங்களது உழைப்பையும் பணத்தையும் போட்டு பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் என சொந்தமாக கடை கட்டி இருக்கின்றனர். நான்கு நாட்களில் கடை திறப்பு விழா இருக்கும் போது சில காரணங்களால் கடை சீல் வைக்கப்பட்டது. ஆனால் அண்ணன் தம்பிகள் முயற்சி செய்து கடையை திறந்து இருக்கின்றனர். மேலும் குடும்பத்துடன் தர்ணாவில் அமர்ந்து கடை திறக்கப்பட்டது. கஷ்டப்பட்டதற்கு என்றுமே பலன் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக் காட்டாகும்
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் சீரியலில் நாளை கடை திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்காக குடும்பமே சேர்ந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடையில் மேள தாளம் சாப்பாடு என அனைத்து ஏற்பாடுகளும் செய்ய இருக்கின்றனர். மேலும் புது புடவைகளுக்கு முல்லை ஜாக்கெட் தைத்து கொடுக்கிறார். இப்படி சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் சீரியல் கதை சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் படப்பிடிப்பு காஞ்சீபுரத்தில் ஒரு கடையில் எடுக்கப்பட்டது.
சந்தியாவை வீட்டை விட்டு துரத்துவதாக சவால் விட்ட அர்ச்சனா – “ராஜா ராணி 2” ப்ரோமோ ரிலீஸ்!
அதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் வர அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது. சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் கூட்டத்தை சரி செய்ய போக ஆனால் அவரால் முடியாமல் காரில் இருக்கிறார். மேலும் மக்கள் அவருடன் செல்பி எடுத்து நீங்க நன்றாக நடிக்கிறீர்கள் என சொல்லி இருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் படப்பிடிப்பின் போது ஜீவா தூங்குவது போல வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.