ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu – விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெற்றி பயணம்!

0
ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu - விஜய் டிவி
ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu - விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" வெற்றி பயணம்!
ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu – விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெற்றி பயணம்!

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் TRPயில் முதலிடத்தில் இருக்க முக்கிய காரணம் அதன் கதை தான். ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என நம் கண் முன்னே காட்டுவதே இந்த சீரியலின் தனி சிறப்பு.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அதற்கு முக்கிய காரணம் சீரியல் நடிகர்களாக இருந்தாலும், கதையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் TRPயில் இடம் பெறும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியல் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருக்கும் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் அதிகமான குடும்ப ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் அமீர், பாவ்னி காதல் உண்மையா? பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!

ஒவ்வொரு வாரமும் புது பிரச்சனைகள் கிளம்பினாலும், அதை அடுத்தநாளே மறந்துவிட்டு அனைவரும் சகஜமாக இருப்பது தான் சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இன்றைய எபிசோடிலும் சண்டை வருகிறது. ஐஸ்வர்யா வீட்டு வேலைகளை செய்ய தனம் அவரை மீனா முன்னால் பாராட்ட, அங்கே தொடங்கிய பிரச்சனை, தற்போது தனம் கயலை ஒதுக்குவதில் வந்து நிற்கிறது. மீனா பேசியதை கேட்டு தனம் மூர்த்தியிடம் குடும்பம் பிரிந்துவிடுமோ என சொல்லி வருத்தப்படுகிறார்.

தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா – குவியும் வாழ்த்துக்கள்!

வீட்டில் முல்லை பாண்டியனை வைத்து கொண்டிருக்க, அவன் பயங்கரமாக அழுகிறான். முல்லை ஐஸ்வர்யா, கண்ணன் சமாதானம் செய்ய அவன் கேட்பதாக இல்லை. உடனே வந்த மீனா எல்லா பிரச்சனைகளையும் மறந்து பாண்டியனுக்கு பால் கொடுக்கிறார். அதை பார்த்த தனம் மூர்த்தியிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். இப்படி அழகாக கதை அமைக்கப்பட்டுள்ளதே சீரியலின் வெற்றியாக இருக்கிறது. மேலும் இன்றைய எபிசோட் அதிகம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here