புது வீடு கட்ட போகும் மூர்த்தி, மீண்டும் வீட்டிற்கு வரும் கதிர் & முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

0
புது வீடு கட்ட போகும் மூர்த்தி, மீண்டும் வீட்டிற்கு வரும் கதிர் & முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்ட்!
புது வீடு கட்ட போகும் மூர்த்தி, மீண்டும் வீட்டிற்கு வரும் கதிர் & முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்ட்!
புது வீடு கட்ட போகும் மூர்த்தி, மீண்டும் வீட்டிற்கு வரும் கதிர் & முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில எபிசோடுகளில் விறுவிறுப்பு குறைந்து உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வர இருக்கும் புதிய களத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் இயக்கப்படுவதால் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில எபிசோடுகளில் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் தொடங்குகிறார். இதற்கு முதலில் வீட்டில் இருப்பவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றாலும் பிறகு எல்லாரும் ஒரு வழியாக ஓகே சொல்லிட்டாங்க. இன்னொரு பக்கம் கண்ணன் பேங்க் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாரு. இப்படி சீரியல் மெதுவா நகர எதும் பெரிய ட்விஸ்ட் வராத அப்டினு ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

திருமணம் செய்ய கெஞ்சும் கோபி, மறுத்து விடும் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இன்றைய எபிசோட்!

அந்த அளவுக்கு சீரியல் சொதப்பலா போயிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் தனியா ஹோட்டல் ஆரம்பிச்ச கதிரும், முல்லையும் வியாபாரத்த எப்படி பெருசாக்குறதுனு யோசிச்சிட்டு இருக்காங்க. இந்த சமயம் முல்லை நாம ஏன் குழந்தைங்களுக்கெல்லாம் டிபன் செஞ்சு கொடுக்க கூடாது அப்டினு ஐடியா குடுக்குறாங்க. உடனே கதிரும் நல்ல ஐடியா தான் செஞ்சு பாப்போம்னு சொல்லறாரு. இதற்கு இடையில் மூர்த்தி வீடு கட்டுறது பத்தி வீட்டுல உள்ள எல்லாரிடமும் கருத்து கேக்குறாரு. நாம ஏன் இந்த வீட்டை இடிச்சிட்டு இங்கயே வீடு கட்டக்கூடாது அப்டினு கேக்குறாரு.

உடனே வீட்டுல இருக்க எல்லாரும் இது நல்ல ஐடியாவா இருக்கே அப்டினு ஓகே னு சொல்ராங்க. அப்புறம் என்ன நல்ல காண்ட்ராக்டரா பாத்து வீடு கட்டுறத பத்தி பேசுவோன்னு மூர்த்தி சொல்லறாரு. அடுத்த நாள் முல்லையும்,கதிரும் எதர்ச்சையா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுப்பக்கம் வராங்க. அங்க வீட்டுக்கு வெளிய ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் னு போர்டு இருக்கிறத பாத்து யோசிக்கிறாங்க. உடனே உள்ள இருந்து வெளிய வந்த ஐஸ்வர்யா இது என்னோட பிரென்ட் ஓட திங்ஸ் மாமா, அவ வெளியூர் போறதால என்ன வச்சுக்க சொல்லிட அப்டினு சொல்ராங்க. இன்னொரு பக்கம் மூர்த்தி கடைக்கு சோகமா வந்து உக்காருறாரு. உடனே தனம் வீடு கட்டுறது பத்தி காண்ட்ராக்டர் கிட்ட பேசுனீங்களானு கேக்குறாங்க. இல்ல எனக்கு என்னமோ காசு பத்தாதுன்னு தோணுது அப்டினு பதில் சொல்லறாரு. இதோட இன்னையோட எபிசோடு முடிவடையுது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here