குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் முல்லை – கதிர் எடுக்கும் முடிவு என்ன? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்டு!

0
குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் முல்லை - கதிர் எடுக்கும் முடிவு என்ன? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்டு!
குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் முல்லை - கதிர் எடுக்கும் முடிவு என்ன? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்டு!
குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் முல்லை – கதிர் எடுக்கும் முடிவு என்ன? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஓரளவுக்கு எல்லா பிரச்சனைகளும் ஓய்ந்திருக்கும் நேரத்தில் அடுத்தபடியாக முல்லைக்கு குழந்தை பிறப்பது தொடர்பான விஷயங்கள் தான் அடுத்த ட்விஸ்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அண்ணன் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். என்றாலும் மூர்த்தி கண்ணனுடன் பேசாதது எல்லாருக்கும் சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இப்போது, கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர்ந்து விட்டதால் எங்கே தனது ரூம் பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் மீனா சீக்கிரமாகவே உறங்க செல்கிறார். ஆனால் தனம் மீனாவை கூப்பிடும் போது விளக்குகளை அணைப்பதும், கதைவை மூடுவதுமாக மீனா செய்யும் செயல்களை பார்த்து ஜீவா சந்தேகப்படுகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!

அதற்கு பின்பு தனம் வந்து போன பின்பு தான் ஜீவாவுக்கு தெரிய வருகிறது, இது ரூம்க்காக போட்ட நாடகம் என. என்றாலும் வழக்கம் போல மீனாவின் குறும்புத்தனத்தை ரசித்து விட்டு செல்கிறார் ஜீவா. மறுபக்கத்தில் தங்குவதற்கு ரூம், பாய் இல்லாமல் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கஷ்டப்பட, அவர்களை தனம் நன்கு கவனித்து கொள்கிறார். பிறகு அவர்கள் இருவருக்கும் நாளைக்குள் ஒரு ரூமை ரெடி செய்து தருவதாக கூறுகிறார் தனம்.

இப்போது, ரூமில் வைத்து எதையோ யோசித்து கொண்டு சோகமாக அமர்ந்திருக்கிறார் முல்லை. அதனை கவனிக்கும் கதிர் என்னவென்று கேட்க, தனக்கு இந்த முறை குழந்தை பிறக்கும் என்று மிகவும் எதிர்பார்த்ததாகவும், அது நடக்கவில்லை என்றும் சோகத்துடன் அழுதுகொண்டே கூறுகிறார். பிறகு வழக்கம் போல, அது எப்போது நடக்கவேண்டுமோ அப்போது தான் நடைபெறும் என்று முல்லையை தேற்றுகிறார் கதிர்.

நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!

அடுத்த நாள் பொழுது விடிந்ததும், மீனா, ஜீவா இருவரும் சேர்ந்து கயல் பாப்பாவை ரெடி செய்கின்றனர். மறுபக்கத்தில் கயலின் பிறந்தநாளுக்காக தடல்புடலாக விருந்து சமைக்கிறார் தனம். இப்போது கோவிலுக்கு சென்று மூர்த்தி, கதிர் இருவரும் கயல் பேரில் அர்ச்சனை போடு விட்டு வர அனைவரும் கயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லுகின்றனர். இந்த கதைக்களத்தை வைத்து பார்க்கும் போது முல்லைக்கு குழந்தை பிறப்பது குறித்த பிரச்சனைகள் தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் அதிகம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here