‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் வில்லனான ஐஸ்வர்யா – சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதையில் வில்லனான ஐஸ்வர்யா - சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதையில் வில்லனான ஐஸ்வர்யா - சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் வில்லனான ஐஸ்வர்யா – சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், அதில் பிரபலமான ஒரு சில சீரியல்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகின்றனர். அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்த ஒரு சில சீரியல்களே TRPயில் போட்டி போடுகின்றனர். என்னதான் 30 நிமிட கதையுடன் ப்ரைம் டைமில் சீரியல்கள் ஒளிபரப்பானாலும். இன்றைய எபிசோட் பற்றிய 30 வினாடி ப்ரோமோவிற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் அந்த ப்ரைம் டைம் சீரியல்களின் ப்ரோமோக்களில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்கள் பற்றி பார்க்கலாம்.

ரோஜா

ரோஜா சீரியலில் ரோஜா குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க அர்ஜுன் போராடி வருகிறார், இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வந்தான் சுட்டான் எஸ்கேப்பு வந்தான் சுட்டான் போனான் ரிப்பிட்டு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மெதுவாக அனுவை விசாரியுங்கள். அப்படியே எவ்வளவு காலம் இந்த கதையை இழு இழு என்று இழுக்க முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பிரியாவை விசாரிக்க வேண்டும் என்றதும்‌ ஏன்‌ ஜெயசீலன் பதறுகிறார்? உண்மை வெளி‌ வரும்‌ என்றா அல்லது தோல்வி பயத்தாலா? என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூனுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், சிலர் மாநாடு எஸ்.ஜே சூர்யாவை காப்பி அடிக்கிறார் அர்ஜூன் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை அடியாட்கள் அடிக்க அவரை தனம் வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து பார்த்துக் கொள்கிறார். ஆனால் மூர்த்தி உதவி செய்ததோடு நிறுத்திக் கொள் என சொல்ல கோவமாக இருக்கும் தனம் கண்ணன் இனிமேல் இங்கே தான் இருப்பான் என சொல்லி அவனை கூட்டிக் கொண்டு வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்துருக்கலாம் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

மற்றொரு ரசிகர் இருக்கு பிரச்சனை இருக்கு நாளைல இருந்து ரெண்டு சட்டி சோறு குழம்பு எக்ஸ்ட்ரா சமைக்கணுமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கதையில் வில்லன் இல்லை என்று ஜஸ்வர்யா வீட்டுக்கு வந்தச்சு, இனி தினமும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வரும் அதுக்கு காரணம் ஜஸ்வர்யா எனறு கூறியுள்ளார். வேலைக்கு போய் எப்படி சம்பாதிக்க போறேன் நெனச்சேன் அப்பாடா..மூணு வேளை சோறு என்று கண்ணன் நினைப்பது போல பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா பேசுர பேச்சுக்கு சீக்கிரம் தனமே கழுத்த பிடிச்சு வெளியே தள்ள போகிறது என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை வெறுப்பேத்த பல வேலைகளை செய்து வரும் நிலையில், கண்ணம்மா பாரதியை வெறுப்பேத்த மருத்துவமனைக்கு செல்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த சீரியல் முடியும் போது நாங்கள் உயிரரோட இருப்பமோ என்று சந்தேகமாக கிடக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்னப்பா ஃபன் பண்ணிக்கிட்டு இருக்கீங்கள்.. சீக்கிரம் சீரியலை முடித்து வைக்க வேண்டும்… என்று கூறியுள்ளார்.

12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

மேலும் ஒருவர் இந்த சீரியல் முடியறதுக்கு முன்னாடி நாங்க எல்லாம் முடிந்து விடுவோம் போல என்று கூறியுள்ளார். அழகில் மயங்கி காதலில் விழுந்து விடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் வாழப்போவது என்னமோ குணத்தை வைத்து தான் என்பதை மறவாதீர்கள்!! என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியலை சீக்கிரம் முடித்து வைத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி சில நாட்களாக சோகமாக இருப்பதை பார்த்த பாக்கியா அவரிடம் எதுவும் பிரச்சனையா என கேட்க கோபி இல்லை என சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி ஒரு மனைவிக்கு அப்படி ஒரு கணவன் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கோபி உங்க அப்பா பெரிய ஆப்பு வைக்கிறார் போல என்று கேட்டுள்ளார்.

கல்யாண பெண்ணாக ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

மற்றொரு ரசிகர் பாக்கியா ஏன் இப்படி இருக்கீங்க உங்களுக்கு தைரியமே வராதா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்னமோ பண்ணுங்க ஆன உண்மை மட்டும் இப்போ தெரிய வராது அது மட்டும் சரியா சொல்லிவிடுவோம் என்று கூறியுள்ளனர். அதிலும் சில ரசிகர்கள் கோபி இதுக்கெல்லாம் அசர ஆளே இல்லையே என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் சமையலை கெடுக்க சல்மாவுடன் சேர்ந்து அர்ச்சனா திட்டமிடுகிறார். அதனால் சரியாக சமைக்க முடியாமல் சரவணன் திட்டு வாங்குகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னதான் சரவணன் திட்டு வாங்கினாலும் அடுத்து அவர்தான் ஜெயிக்கிற மாதிரி காட்ட போறீங்க அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட் அப் கொடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்போ எந்த சீரியலும் ஹீரோவுக்கு சாதகமாக கதை இல்லை எல்லாம் வில்லிக்கு சாதகமா தான் எடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தயவு செய்து சீரியலை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்,மாறன் ஆள் மாறாட்டம் செய்தாலும் தவறை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஒரு சீரியல்தான் நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு அதையும் ஆள்மாறாட்டம் செஞ்சி கெடுத்துட்டீங்களே என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பரவாயில்லை மாறன் நல்லவன் தான் போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் வெளியில வந்தா மாறன் என்ன ஆவார் என்று கேட்டுள்ளனர். அதிலும் சில ரசிகர்கள் மாயன் வெளியில வந்தாலும் மாறனை மன்னித்து விடுவார் என்று தான் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!