‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்டு - புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்டு - புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடைக்கு உருவான பல்வேறு பிரச்சனைகளை அடுத்து ஒரு வழியாக கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அவ்வப்போது சில ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய எபிசோடுகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடை அதிகாரிகளால் திவால் செய்யப்பட, அதனை மீட்பதற்காக அண்ணன், தம்பிகள் அனைவரும் போராடி கொண்டிருப்பதை போல ஒரு ஸ்வாரசியமான கதைக்களம் வெளியாகி கொண்டிருக்கிறது.

திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

இதற்கு அடுத்தாக, கடையை மூடியதற்கான உண்மை காரணத்தை அந்த அதிகாரி மூலம் அறிந்து கொள்ளும் மூர்த்தி, கடையை மீட்கும் வரையும் அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார். இப்போது மூர்த்தியை தேடி குழந்தையுடன் வரும் தனம் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தியுடன் சேர்ந்து அலுவலக வாசலில் உட்காருகின்றனர். இவர்களை தொடர்ந்து இந்த விஷயத்தை அறியும் மீனாவும் அந்த போராட்டத்தில் இணைகிறார். இதன் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை அவர்கள் மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் – எச்சரித்த பிக்பாஸ் குரல்!

இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கடைதிறப்பு விழா தொடர்பான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா அதாவது நடிகை சாய் காயத்ரி ஒரு குழந்தையை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த குழந்தை ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் கிளைமேக்ஸ் எபிசோடில் வெற்றி – மலரின் குழந்தையாக காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here