விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை வளைகாப்பு விழா” – வைரலாகும் ப்ரோமோ!

0
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் "முல்லை வளைகாப்பு விழா" - வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை வளைகாப்பு விழா” – வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவியில் கடந்த 3 வாரங்களாக சீரியலில் விறுவிறுப்பை தூண்டுவதற்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்க பல்வேறு பிரச்சனைகள் வருவது போன்றும், மேலும் அந்த பிரச்சனை சரியாகி கடை திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது. இதனை தொடர்ந்து முல்லை வளைகாப்பு விழா நடக்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முல்லை வளைகாப்பு விழா:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தை வைத்து தான் மொத்த சீரியலின் கதை உள்ளன. தினசரி நம் தமிழ் குடும்பங்களில் என்ன நடக்கிறதோ அது அப்படியே இந்த சீரியலில் டெலிகாஸ்ட் செய்யப்படும். காலையில் எழுவது, வேலைக்கு போவது, இரவு வீடு திரும்புவது, சாப்பிடுவது. இதற்கு இடையில் வீட்டில் இருக்கும் பெண்களால் அவ்வப்போது ஏற்படும் சண்டைகள். ஒரு வாரத்தில் அந்த சண்டை சரி ஆகி மீண்டும் இணைந்து விடுவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அன்றாடம் ஒளிப்பரப்படும் கதையாக இருக்கிறது.

வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த சீரியலில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஜோடி முல்லை- கதிர் ஜோடி தான். கதிர் – முல்லை ஜோடிக்கு என்று தனியாக பல ரசிகர்கள் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவிற்கு பிறகு, இந்த முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளதாக கிசுகிசுக்கள் வந்தது. இருப்பினும் தற்போது இவர்களின் காதல் காட்சிகள் வரும் நாட்களில் ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

கடந்த வாரம் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு கதிர்- முல்லை இருவரும் குழந்தை விஷயமாக டாக்டரை சென்று பார்க்கின்றனர். அப்போது சோதித்து பார்ப்பதில், முல்லைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிடுகிறார். இந்த நிலையில் தற்போது முல்லை கர்ப்பமாகி உள்ளதாகவும், முல்லைக்கு குடும்பமே வளைகாப்பு விழா நடத்த உள்ளதாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here