ஹோட்டல் தொழில் முன்னேற்றம் கண்ட கதிர் முல்லை, குடும்பத்தினருக்கு புதிதாக சமைத்து கொடுக்கும் மீனா – இன்றைய எபிசோட்!

0
ஹோட்டல் தொழில் முன்னேற்றம் கண்ட கதிர் முல்லை, குடும்பத்தினருக்கு புதிதாக சமைத்து கொடுக்கும் மீனா - இன்றைய எபிசோட்!
ஹோட்டல் தொழில் முன்னேற்றம் கண்ட கதிர் முல்லை, குடும்பத்தினருக்கு புதிதாக சமைத்து கொடுக்கும் மீனா - இன்றைய எபிசோட்!
ஹோட்டல் தொழில் முன்னேற்றம் கண்ட கதிர் முல்லை, குடும்பத்தினருக்கு புதிதாக சமைத்து கொடுக்கும் மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவின் பார்லருக்கு கஸ்டமரை தனம் வர வைக்கிறார். மறுபக்கம் கதிர் முல்லை தனது தொழிலில் சிறிது முன்னேற்றம் காண்கின்றனர். மறுபக்கம் மீனா குடும்பத்திற்கு சுவையான உணவை சமைத்து கொடுக்கிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கதிர் கிளம்புகிறார். பின் கடையில் கஸ்டமர் ஒருவர் வீட்டில் விசேஷம் என சொல்லி மளிகை பொருள் வாங்க வருகிறார். அப்போது மூர்த்தி உங்க வீட்டில் விசேஷமா என கேட்க ஆமாம் கல்யாணம் என சொல்கிறார். உடனே மூர்த்தி அப்போ எல்லா பொருள்களும் 2கிலோ சேர்த்து போட சொல்கிறேன் என சொல்கிறார். பின் மூர்த்தி கல்யாணம் அன்னைக்கு போதாமல் போனால் கடைசியில் கஷ்டமாக இருக்கும் என சொல்கிறார். மீதமிருந்தால் திருப்பி கொடுங்கள் என சொல்கிறார்.

பின் தனம் உங்க வீட்டில் யாருக்கு கல்யாணம் என கேட்க என் மகளுக்கு தான் என கஸ்டமர் சொல்கிறார். என் தங்கச்சி மேக்கப் போடுவாள் உங்களுக்கு தேவை என்றால் அவளிடம் கேளுங்கள் என சொல்கிறார். என் தங்கச்சி நன்றாக போடுவாள் என சொல்ல உங்களை எனக்கு நன்றாக தெரியுமே அவங்களையே சொல்லிடுங்க என அந்த கஸ்டமர் சொல்கிறார். உடனே தனம் ஐஸ்வர்யாவின் நம்பர் கொடுக்கிறார். அதை பார்த்த மூர்த்தி ஐஸ்வர்யா எப்படி மேக்கப் போடுவாள் என உனக்கு தெரியாது நாளைக்கு எதாவது பிரச்சனை ஆகிவிட போகிறது என சொல்ல, தனம் அதெல்லாம் இல்லை அவள் நன்றாக மேக்கப் போடுவாள் என சொல்கிறார்.

பின் ஜீவாவிடம் ஒரு பக்கம் கொழுந்தனுக்கு ஆர்டர் வாங்கி கொடுக்கிறாள். மறுபக்கம் ஐஸ்வர்யாவிற்கு கஸ்டமர் அனுப்பி வைக்கிறாள் இவளுக்கு கடையை பற்றி அக்கறை இல்லை என மூர்த்தி சொல்ல, அண்ணி நம்ம கடையில் தான் இருக்கிறார் அப்பறம் என்ன என ஜீவா சொல்கிறார். பின் மீனா புதிதாக சமையல் செய்ய கண்ணனை சிக்கன் வாங்கி வர சொல்கிறார். பின் கண்ணன் என்ன செய்ய போறீங்க என கேட்க சிக்கன் மோமோஸ் செய்ய போகிறேன் என மீனா சொல்கிறார். அதை பார்த்து கண்ணன் நன்றாக இல்லை என்றால் நான் வெளியே சென்று சாப்பிடுவதாக சொல்கிறார். அதெல்லாம் நன்றாக இருக்கும் என மீனா சொல்கிறார்.

மீனா கண்ணனை உதவி செய்ய சொல்லி சொல்ல ஆனால் ஐஸ்வர்யா எனக்கு நாளைக்கு பார்லர் திறப்பு இருக்கிறது என சொல்கிறார். உடனே கண்ணன் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி கிளம்புகிறார். மறுபக்கம் கதிர் முல்லை கடையில் கணக்கு வழக்குகளை பார்க்க நஷ்டம் குறைவாக வந்துள்ளதாக சொல்கிறார். கதிர் இது நல்ல முன்னேற்றம் தான் என சொல்ல, ஆனால் முல்லை அப்பா இன்னும் லாபம் வரவில்லையே என நினைத்து வருத்தப்படுகிறார். பின் மீதமுள்ள சாப்பாடுகளை இல்லாதவர்களுக்கு கொடுக்க கிளம்புகிறார்.

பின் தனம், மூர்த்தி மற்றும் ஜீவா மூவரும் கடையில் இருந்து வீட்டிற்கு வர கண்ணன் வண்டியை பார்த்து சீக்கரம் வந்துவிட்டான் போல என நினைக்கிறார். பின் ஐஸ்வர்யாவின் புது பார்லர் போர்டை  பார்த்து தனம் மூர்த்தியிடம் காட்ட இப்படி கையில் எழுதி வைப்பதற்கு ப்ளக்ஸ் அடித்திருக்கலாம் என மூர்த்தி சொல்ல, தனம் அவளுக்கு செலவு இல்லாமல் பார்லர் தொடங்க வேண்டும் என ஆசை என தனம் சொல்கிறார். பின் வீட்டிற்குள் கண்ணன் முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டு இருக்க மூர்த்தி அதை பார்த்து சிரிக்கிறார். என்னடா கோலம் இது என கேட்க, ஐஸ்வர்யா பழக என் முகத்தை தான் பயன்படுத்துவதாக கண்ணன் சொல்கிறார்.

தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

தனம் வெளியே ப்ளக்ஸ் நன்றாக இருப்பதாக சொல்ல, கதிர் மாமா தான் பார்த்து குழி தோண்டி அதை வைத்து கொடுத்தார் என சொல்கிறார். பார்லர் தொடங்க இருப்பதாக சொன்னதும் அவர் எனக்கு 100 ரூபாய் வைத்து கொடுத்துவிட்டு சென்றதாக சொல்கிறார். தனம் அவனும் பெரியவன் தான சந்தோசம் என சொல்கிறார். பின் மீனா சமையல் செய்துவிட்டு வர அனைவரும் மீனாவை பார்த்து சிரிக்கின்றனர். பின் எல்லாரும் வாங்க உங்களுக்கு புதுசாக சமைத்து வைத்திருப்பதாக சொல்ல, இது என்ன புது கோலம் என கண்ணன் கேட்கிறார். சமையல் செய்தால் இப்படி தான் ட்ரெஸ் போட வேண்டும் என சொல்கிறார்.

பின் அனைவரும் மீனாவின் சமையலை நினைத்து பதட்டமாக இருக்கிறார்கள். கண்ணன் குட்டி அண்ணி வித்தியாசமாக சமைத்ததாக சொல்லி நன்றாக இருக்கும் என நம்பிக்கை கொடுக்கிறார். பின் மீனா சமைத்ததை எல்லாம் கொண்டு வருகிறார். மீனா அதை திறந்து காட்ட தனம் என்னது இது என கேட்கிறார். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் என மீனா சொல்ல, அனைவரும் மோமோஸ் எடுத்து பார்த்து சாப்பிட்டு பார்க்கின்றனர். பின் மூர்த்தி நன்றாக இருப்பதாக சொல்ல, மீனா சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!