மூர்த்தியிடம் வீட்டை வாங்குவது பற்றி பேசிய ஜனார்த்தனன், சந்தோஷத்தில் மீனா – இன்றைய எபிசோட்!

0
மூர்த்தியிடம் வீட்டை வாங்குவது பற்றி பேசிய ஜனார்த்தனன், சந்தோஷத்தில் மீனா - இன்றைய எபிசோட்!
மூர்த்தியிடம் வீட்டை வாங்குவது பற்றி பேசிய ஜனார்த்தனன், சந்தோஷத்தில் மீனா - இன்றைய எபிசோட்!
மூர்த்தியிடம் வீட்டை வாங்குவது பற்றி பேசிய ஜனார்த்தனன், சந்தோஷத்தில் மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வங்கியில் வேலை கஷ்டமாக இருப்பதாக குடும்பத்திடம் சொல்ல தனம் அதை நினைத்து மனசு கஷ்டப்படுகிறார். பின் மீனாவின் அப்பா மூர்த்தியிடம் வீட்டை நானே வாங்கி கொள்கிறேன் என சொல்கிறார். மீனா இது நல்ல ஐடியா தான் என மூர்த்தியிடம் சம்மதம் சொல்ல சொல்கிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டை விற்பது குறித்து தனத்திடம் பேச விற்பவர் பற்றி இல்லாமல் நாம வாங்க வேண்டிய வீடு பற்றி விசாரிக்க வேண்டும் என தனம் சொல்கிறார். மூர்த்தி ஜீவாவை பேச சொல்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் வேலை விட்டு வர மூர்த்தி ஏன் இவ்வளவு நேரம் என கேட்கிறார். கண்ணன் அலுப்புடன் வர ஜீவா மூட்டை தூக்கிய நாங்களே நன்றாக இருக்க நீ என்ன இவ்வளவு அலுப்புடன் இருக்கிறாய் ஏசியில் இருக்கும் உனக்கே இப்படி இருக்கிறதா என கேட்க, நானும் பேங்க் வேலை சுலபம் என நினைத்தேன் ஆனால் என்னை உட்காரவிடவில்லை. மேலும் கடன் வாங்கியவன் போனை எடுக்கவில்லை என்றால் எங்களை தான் திட்டுவதாக சொல்ல, உடனே ஜீவா யார் உன்னை திட்டியது சொல்லு நான் வந்து கேட்கிறேன் என சொல்கிறார்

பின் தனம் அவன் என்ன ஸ்கூல் படிக்கிறானா என கேட்க மூர்த்தி அதற்காக அரசு வங்கியில் சண்டை போடுவியா அவன் வேலையில் உள்ள பிரச்சனையை அவனே பார்த்து கொள்வான் என சொல்கிறார். பின் ஜீவாவிற்கு போன் வர நாம கேட்ட பணத்தை உடனே கொடுப்பதாக சொன்னார்கள் ஆனால் வீட்டை உடனே காலி செய்ய வேண்டுமாம் என ஜீவா சொல்ல மூர்த்தி காலையில் யோசித்து முடிவு செய்வோம் என சொல்கிறார். பின் தனம் கண்ணனிடம் வேலை கஷ்டமாக இருக்கிறதா என கேட்கிறார். கண்ணன் அதெல்லாம் சமாளித்துவிடுவேன் நீங்க கவலைப்படாதீங்க என சொல்கிறார். உன் அண்ணனும் அதை நினைத்து கவலைப்படுவார் என சொல்ல, கண்ணன் அண்ணன் சொல்வது போல ஏற்கனவே கஷ்டப்பட்டு வேலை செய்தால் இப்போது கஷ்டம் இல்லாமல் இருக்கும் என சொல்கிறார்

பின் மீனா வந்து உனக்கு என்னப்பா நீ அரசு ஊழியர் மாசம் பிறந்ததும் சம்பளம் வந்துவிடும் என சொல்ல கண்ணன் மாசம் பிறந்ததும் நான் டிரீட் வைக்கிறேன் என சொல்ல, ஐஸ்வர்யா நானும் கொடுக்கிறேன் என சொல்ல மீனா அதெல்லாம் உனக்கு வந்த பரிசு நீ சம்பாரித்ததும் டிரீட் வை என மீனா சொல்கிறார். நீங்க எதுவும் கொடுக்கவில்லை என ஐஸ்வர்யா சொல்ல, மீனாவும் எதாவது தொழில் தொடங்கி டிரீட் வைப்பாள் என தனம் சொல்கிறார். மறுபக்கம் முல்லையும் கதிரும் புது தொழிலை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் காய்கறிகளை குறைவாக போட சொல்ல, முல்லை நாளை முதல் அசைவம் போடலாம் என சொல்கிறார்.

தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்? அரசு அறிவிப்பு!

கதிர் அதனால் நஷ்டம் வருமா என கேட்க எப்படி போகிறது என பார்த்துவிட்டு பின் யோசிக்கலாம் என சொல்கிறார் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் தான் சரியாக வரும் என முல்லை சொல்ல கதிர் சரி என சொல்கிறார். மறுநாள் மூர்த்தி ஜீவா கடைக்கு கிளம்ப தனத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவின் அப்பா மூர்த்தியை பார்க்க வருகின்றனர். வீட்டை விற்க இருப்பதாக கேள்வி பட்டதாக அவர் சொல்ல, மூர்த்தி விவரத்தை சொல்கிறார். நீங்க வீட்டை விற்கமாட்டீர்கள் என நான் நினைத்தேன் என மீனாவின் அப்பா சொல்ல, சொந்த வீட்டை ஏன் விற்க வேண்டும் என மீனாவின் அப்பா கேட்கிறார்.

வீடு மிகவும் பழசாகிவிட்டது அதனால் தான் வீட்டை விற்க முடிவு செய்துள்ளதாக மூர்த்தி சொல்கிறார். சரி என்ன விலை என மீனாவின் அப்பா கேட்க, மொத்தம் 70 லட்சத்திற்கு விற்கலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். அதான் கொடுத்துவிட்டு வேற இடம் வாங்கி வீடு கட்டலாம் என முடிவு செய்துள்ளதாக மூர்த்தி சொல்ல, மீனா நானே இந்த வீட்டை வாங்கிறேன் என சொல்கிறார். மூர்த்தி அதை கேட்டு அதிர்ச்சி அடைய எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார். பின் தனம் நாங்க வீட்டை விற்றாலும் வேறு இடம் வாங்கி வீடு கட்டும் வரை நாங்க காலி செய்ய முடியாது என சொல்ல இது தான் பிரச்சனையா என மீனாவின் அப்பா கேட்க எத்தனை மாசம் வேண்டும் என்றாலும் இங்கே இருங்க என மீனாவின் அப்பா சொல்கிறார்.

பின் மீனாவின் அப்பா நன்றாக யோசித்து முடிவு பண்ணுங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஜீவாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்க மீனா சந்தோசமாக இருக்கிறார். தனம் மூர்த்தியிடம் என்ன சொல்வது என கேட்க, ஜீவா ஆமாம் அவர் என்ன தேதி குறிக்க சொல்கிறார் என கேட்கிறார். உடனே மீனா இதில் யோசிக்க என்ன இருக்கு அவர் தான் நாம சொன்ன விலைக்கு சரி என சொல்லி இருக்காரே. அதுவும் நாம புது வீடு கட்டி போகும் வரை இங்கே இருக்க சொல்லிவிட்டார். உடனே அப்பாவிடம் சரி என சொல்லுங்க என மீனா சொல்கிறார். ஆனால் மூர்த்தி எப்போதும் நெருங்கிய உறவுகளுடன் கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ள கூடாது என சொல்ல, மீனா அதெல்லாம் ஒன்றும் ஆகாது என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!