தனத்தின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், பரிசு கொடுத்த முல்லை மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனத்தின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், பரிசு கொடுத்த முல்லை மீனா - இன்றைய
தனத்தின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், பரிசு கொடுத்த முல்லை மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனத்தின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், பரிசு கொடுத்த முல்லை மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் பிறந்தநாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வாங்கி சப்ரைஸ் செய்கின்றனர். பின் முல்லையும், மீனாவும் தனத்திற்கு பரிசு வாங்கி கொடுக்கின்றனர். மறுபக்கம் மூர்த்தியை எதாவது பரிசு வாங்கி கொடுக்க சொல்லி ஜீவாவும் கதிரும் சொல்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரை இரவு முல்லை அழைத்து கொண்டு வருகிறார். அப்போது என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க அக்காக்கு பிறந்தநாள் கேக் கட் செய்ய போகிறோம் என சொல்கிறார். அப்போது மீனா ஜீவாவை அழைத்து கொண்டு வர ஜீவா தூக்கத்தில் தல்லாடிக் கொண்டே வருகிறார். முல்லை ஜீவா குடித்திருக்கிறாரா என கேட்க மீனா அதெல்லாம் இல்லை அவன் தூங்குறான் என சொல்கிறார். பின் கதிர் கேக் எங்கே என கேட்க, கண்ணன் வாங்கி கொண்டு வர போயிருக்கான் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் போலீஸ் வந்தால் ஓடிருவானே என சொல்ல, அவனுடைய நண்பரின் கடை என சொல்கிறார். பின் கண்ணன் கேக் உடன் வர ஆட்டாமல் வா என சொல்கிறார். அனைவரும் அமைதியாக வருகின்றனர். அப்போது மீனா நான் எழுப்புகிறேன் என சொல்ல, மீனா தவறி கீழே விழுந்துவிடுகிறார். மூர்த்தி தனமும் பதட்டமாக இருக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். தனத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. அப்போது கண்ணன் கேக் வைக்க அதில் பெயர் இல்லாமல் இருக்கிறது. ஆட்டாமல் கொண்டு வர வேண்டும் என மீனா சொல்ல, பெயர் இருக்கும் அட்டை இருக்கிறது என கொண்டு வருகிறார்.

தனம் கேக் வெட்ட அனைவருக்கும் ஊட்டி விட்டு சந்தோசப்படுகின்றனர். மறுநாள் தனமும் மூர்த்தியும் கோவிலுக்கு சென்றுவிட்டு வருகின்றனர். மூர்த்தி நேற்று கேக் வெட்டியது சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். அப்போது மீனா பரிசுடன் வருகிறார். மீனா பட்டு புடவையை கொடுக்க எதற்கு இவ்வளவு காசு கொடுத்து வாங்கினாய் என கேட்கிறார். பின் முல்லையும் ஹாண்ட்பேக் வாங்கி கொடுக்கிறார். தனம் பரிசுகளை பார்த்து சந்தோசப்படுகிறார்.

அப்பா அம்மாவை சேர்த்து வைக்க சொல்லி சௌந்தர்யாவிடம் அழும் லட்சுமி, ஷர்மிளாவிடம் நடிக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

தனத்தின் அண்ணன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வர மூர்த்தி அவரை பார்த்து சந்தோசப்படுகிறார். ஜெகா தனத்திற்கு புடவை கொண்டு வருகிறார். மீனா புடவையை வாங்கி விலையை பார்க்கிறார். பின் கடையில் மூர்த்தி இருக்க ஜீவாவும் கதிரும் வருகின்றனர். சரவணன் நன்றாக சாப்பிட்டேன் என சொல்ல, மூர்த்திக்கு பசி இல்லை என சொல்கிறார். அப்போது சரவணன் வீட்டில் இருந்து நல்ல சாப்பாடு வந்திருக்கிறது என சொல்ல, கதிர் அண்ணிக்கு எதாவது வாங்கி கொடுத்து இருக்கீங்களா என கேட்கிறார். அதான் வாழ்த்து சொன்னேன் என சொல்ல, அதெல்லாம் பழக்கம் இல்லை என மூர்த்தி சொல்கிறார்.

பின் கதிர் நான் முல்லைக்கு ஜிம்மிக்கி வாங்கி கொடுத்தேன் நீங்களும் எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் மூன்று பேரும் எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்ல, என்ன வாங்கலாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது என்ன வாங்குவது என தெரியாமல் இருக்க மூர்த்தி நான் வாங்கி கொடுக்கிறேன் என சொல்கிறார். முதலில் கடை வியாபாரத்தை பார்க்கலாம் என சொல்கிறார். பின் தனம் அத்தை நியாபகமாக இருப்பதாக சொல்கிறார். என்னுடைய பிறந்தநாளை அத்தை மறக்கவே மாட்டார் எப்படியாவது வாழ்த்து சொல்வார் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here