கதிரிடம் மனதில் உள்ளதை பேசிய மீனாவின் அப்பா,பார்வதி தான் பிரச்சனைக்கு காரணம் என சொல்லும் முல்லை – இன்றைய எபிசோட்!

0
கதிரிடம் மனதில் உள்ளதை பேசிய மீனாவின் அப்பா,பார்வதி தான் பிரச்சனைக்கு காரணம் என சொல்லும் முல்லை - இன்றைய எபிசோட்!
கதிரிடம் மனதில் உள்ளதை பேசிய மீனாவின் அப்பா,பார்வதி தான் பிரச்சனைக்கு காரணம் என சொல்லும் முல்லை - இன்றைய எபிசோட்!
கதிரிடம் மனதில் உள்ளதை பேசிய மீனாவின் அப்பா,பார்வதி தான் பிரச்சனைக்கு காரணம் என சொல்லும் முல்லை – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மருத்துவமனையில் கதிரை பார்த்த மீனாவின் அப்பா நன்றாக யோசித்து பிரச்சனையை காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டீர்கள் என சொல்கிறார். என் மாப்பிள்ளை இப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் முல்லை எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீ தான் என பார்வதியை குறை சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையை வீட்டிற்கு கிளம்ப சொல்ல முல்லை நீங்க இங்கே எப்படி தனியாக இருப்பீங்க என கேட்கிறார். யாரும் உங்களிடம் பேசவும் மாட்டார்கள் மாமாவை பார்க்கவும் விட மாட்டார்கள் இங்கே இருந்து என்ன செய்ய போறீங்க என கேட்க நான் பார்த்துக் கொள்கிறேன் என கதிர் ஆட்டோ பிடித்து முல்லையை அனுப்பி விடுகிறார். பின் கதிர் உள்ளே வர மீனாவின் அப்பா போன் பேசிக் கொண்டே வருகிறார்.

அவர் கதிரை பார்த்து நீங்க எடுத்த முடிவு தான் நல்ல முடிவு எல்லாரும் சொல்லியும் நீங்க கேட்காமல் இருப்பதை பார்த்தால் நீண்ட நாட்களாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கீங்க போல என சொல்கிறார். ஆனால் என் மாப்பிள்ளை ஒரு நாள் கூட இப்படி முடிவை எடுக்கமாட்டார். நான் எவ்வளவு சொல்லி கூட ஒரு நாள் கூட விருப்பப்பட்டு என் வேலையை பார்க்கமாட்டார் எப்போதும் என் கடை தான் முக்கியம் என சொல்லி அங்கே சென்று மிளகாய் உப்பு மடிக்கும் வேலையை பார்க்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க எப்படி புத்திசாலித்தனமாக முடிவெடுத்து இருக்கீங்க ஆனால் இந்த முடிவிற்கு நான் தான் காரணம் என என்னை குறை சொல்வதாக சொல்ல இது என்னுடைய முடிவு இதில் யாருக்கும் காரணம் இல்லை என கதிர் சொல்கிறார். பின் மீனாவின் அம்மா வந்து மீண்டும் பிரச்சனையை தொடங்காதீர்கள் என சொல்லி கூட்டி செல்கிறார். மறுபக்கம் பாண்டியன் அழுது கொண்டே இருக்க மீனாவால் சமாளிக்க முடியவில்லை. அப்போது தனமும் ஜீவாவும் வந்துவிட தனத்தை பார்த்ததும் தான் பாண்டியன் அழுகையை நிறுத்துகிறான். கவலைப்படாதீங்க அக்கா என மீனா ஆறுதல் சொல்கிறார்.

பின் தனம் நான் சாப்பாடு ஊட்டிவிட்டு வருகிறேன் நாம இப்பவே கிளம்பி விடுவோம் என சொல்ல மாமா கண் விழித்தால் என்னை தேடுவார் என சொல்கிறார். பின் கண்ணன் போனை கொடுத்து சார்ஜ் போட சொல்கிறார். மீனா ஜீவாவிடம் கதிர் வந்ததாக சொன்னாய் என்ன ஆச்சி என கேட்க ராத்திரி கதிர் முல்லை வந்தார்கள் நான் தான் காரணம் என அவன் அழுதான் வீட்டிற்கு வா எல்லாம் சரியாகிவிடும் என அண்ணி சொன்னார்கள் ஆனால் நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டேன் என சொல்கிறான். அதை கேட்டு எனக்கே கோவம் வந்துவிட்டது.

ஆனால் இவ்வளவு நடந்தும் அவன் அங்கையே இருக்கிறான். அவன் இப்படி யோசித்து நான் பார்த்ததே இல்லை என ஜீவா சொல்கிறார். மீனா எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். கதிர் இந்த வீட்டிற்கு வரவே கூடாது என தெளிவாக இருக்கிறான். எல்லாரும் வந்து கதிரை திட்டினார்கள் ஆனால் அவன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பின் தனம் கிளம்பி வர ஜீவா எங்கே என கேட்கிறார். அவன் கடைக்கு சென்றிருப்பதாக மீனா சொல்ல, பணம் கொண்டு வர சென்று இருக்கிறான் என சொல்கிறார்.

பாரதி திட்டியதை நினைத்து கோவப்படும் கண்ணம்மா, வெண்பா போன் செய்ததால் கடுப்பான பாரதி – இன்றைய எபிசோட்!

பின் ஜீவா வந்துவிட தனம் சாமி கும்பிட்டு கிளம்புகிறார். அப்போது ஜீவா வர கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் என சொல்கிறார். பின் ஜீவாவிற்கு மூர்த்தி கண் விழித்ததாக போன் வருகிறது. அதை நினைத்து சந்தோசப்பட்டு கிளம்புகின்றனர். பின் முல்லை வீட்டிற்கு வர பார்வதி எங்கே போனீங்க என்ன ஆச்சு மறுபடியும் என்ன பிரச்சனை உன்னை மட்டும் தனியாக அனுப்பி இருக்காரு என் மகளுக்கு தான் எல்லா பிரச்சனையும் வரும் என சொல்ல முல்லை உன் பேச்சை நிறுத்து என சொல்கிறார். மூர்த்தி மாமாவிற்கு நெஞ்சுவலி என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் முல்லை நீ செய்த பிரச்சனையால் தான் எல்லாம் நடந்தது என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here