வேலை செய்யும் ஹோட்டலில் கதிரை பார்த்த முல்லை அப்பா அம்மா – இன்றைய எபிசோட்!

0
வேலை செய்யும் ஹோட்டலில் கதிரை பார்த்த முல்லை அப்பா அம்மா - இன்றைய எபிசோட்!
வேலை செய்யும் ஹோட்டலில் கதிரை பார்த்த முல்லை அப்பா அம்மா - இன்றைய எபிசோட்!
வேலை செய்யும் ஹோட்டலில் கதிரை பார்த்த முல்லை அப்பா அம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை வீட்டிற்கு வரமாட்டேன் என மீனா சொல்கிறார். பின் முல்லையின் அப்பா அம்மா ஹோட்டலிற்கு சாப்பிட செல்ல அங்கே கதிரை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். முல்லையிடம் இது பற்றி சொல்ல அவர் வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை வீட்டிற்கு மீனாவை ஜீவா அழைத்து கொண்டு வருகிறார். ஆனால் மீனா வீட்டிற்கு உள்ளே வரமாட்டேன் என சொல்கிறார். முல்லை இவ்வளவு தூரம் வந்துடீங்க வீட்டிற்குள் வாங்க என கையை பிடித்து இழுக்கிறார். ஆனால் மீனா முல்லை கையை தட்டிவிட்டு மாமா சொல்வதை கேட்காமல் நீங்க வெளியே சென்றுவிட்டீர்கள் மாமா சொல்வதை நான் கேட்க வேண்டும் என சொல்கிறார். ஜீவாவிடம் கோவிலை மூடிவிடுவார்கள் என சொல்ல, இருவரும் கிளம்புகின்றனர். என்னை எதற்கு இங்கே கூட்டிக் கொண்டு வந்தாய் என மீனா சண்டை போடுகிறார்.

மறுபக்கம் முல்லையின் அம்மா அப்பா வெளியே சென்றுவிட்டு ஹோட்டலில் சாப்பிடலாம் என சொல்லி செல்கின்றனர். அப்போது முல்லை அம்மா அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ஆனால் முல்லை அப்பா சாப்பிட்டு சென்று விடுவோம் என சொல்கிறார். பின் இருவரும் கதிர் வேலை செய்யும் ஹோட்டலிற்கு செல்கின்றனர். கதிர் அவரை பார்க்காமல் சாப்பாடு வைக்க முல்லை அப்பா கதிரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் முல்லை அம்மாவும் பார்த்துவிட்டு இப்படி எச்ச இலை எடுத்து தான் என் மகளை காப்பாற்றுவேன் என சொன்னீங்களா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என் மகளை எப்படி எல்லாம் வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்தேன் ஆனால் என் மகள் இப்படி கஷ்டப்படுகிறாள் அதை எல்லாம் பார்க்க வேண்டிய தலை எழுத்து என சொல்கிறார். கதிர் எதுவும் பேசாமல் இருக்க முதலாளி வந்து என்ன பிரச்சனை என கேட்கிறார். உடனே முல்லை அப்பா ஒன்றுமில்லை என சொல்ல ஒன்றுமில்லையா என் மகள் வாழ்க்கை எல்லாம் போய்விட்டது என சொல்லி சத்தம் போடுகிறார். பின் இருவரும் கிளம்ப குடும்ப பிரச்சனை எல்லாம் இங்கே கொண்டு வராதீங்க என சொல்கிறார்.

பின் முல்லை அப்பா முல்லை வீட்டிற்கு செல்கிறார். அங்கே முல்லையிடம் நீ நன்றாக இருக்கீயா என கேட்க இருக்கேன் அப்பா என முல்லை சொல்கிறார். ஆனால் வீட்டில் தனியாக இருப்பதால் நேரம் போகவில்லை அங்கே எனக்கு நேரம் போதாமல் இருக்கும் இவரும் காலை சென்றுவிட்டு இரவு தான் வருவதாக சொல்ல, முல்லையிடம் என்ன வேலை செய்கிறார் என கேட்கிறார். எதோ பழைய சூப்பர் மார்க்கெட் போல அவங்க வீட்டிற்கு வரும் போதெல்லாம் வெங்காய வாடை வருகிறது. மூட்டை தூக்குவார் போல என்னிடம் சொல்லவில்லை என சொல்கிறார்.

முல்லை அப்பா அவர் இங்கே தான் வேலை செய்வதாக சொல்ல, இல்லை அவர் காரைக்குடியில் வேலை செய்கிறார் என முல்லை சொல்கிறார். சொல்லவே சங்கட்டமாக இருக்கிறது என முல்லை அப்பா சொல்ல இன்னைக்கு அம்மாவும் நானும் வெளியே சென்றுவிட்டு ஹோட்டலிற்கு சாப்பிட சென்றோம் அப்போது அங்கே மாப்பிள்ளை வேலை செய்து கொண்டிருந்தார் என சொல்ல, முல்லை அதிர்ச்சி அடைகிறார். எனக்கே அதை பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டது உன் அம்மா அதை பார்த்து பயங்கர கோவத்தில் இருக்கிறார் என சொல்கிறார்.

அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

எல்லா வேலையும் நல்ல வேலை தான் இருந்தாலும் மாப்பிள்ளை இவ்வளவு கஷ்டப்படுவதை பார்த்து வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். முல்லை கஷ்டப்பட்டு வேலை செய்வதை நினைத்து கஷ்டப்படுகிறார். மறுபக்கம் கண்ணன் ஐஸ்வர்யா வெங்காயம் உரித்துக் கொண்டிருக்க அப்போது மீனா வந்து இருவரும் எவ்வளவு நேரம் வெங்காயம் உரிக்கிறீர்கள் என கேட்கிறார். அப்போது முல்லை அம்மா அங்கே வர கண்ணனும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர் தனம் எங்கே என கேட்க, அவர் கடைக்கு சென்று இருப்பதாக சொல்கிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here