புது வேலைக்காக பணம் கேட்கும் கண்ணன், கதிர் ஹோட்டலிற்கு வந்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது வேலைக்காக பணம் கேட்கும் கண்ணன், கதிர் ஹோட்டலிற்கு வந்த ஜீவா - இன்றைய
புது வேலைக்காக பணம் கேட்கும் கண்ணன், கதிர் ஹோட்டலிற்கு வந்த ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது வேலைக்காக பணம் கேட்கும் கண்ணன், கதிர் ஹோட்டலிற்கு வந்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் பாண்டியனை மீண்டும் கூட்டிக் கொண்டு செல்ல ஆனால் மீனாவும் ஐஸ்வர்யாவும் முடியாது என சொல்கின்றனர். பின் கண்ணன் புது வேலையில் சேர பணம் தேவைப்படுகிறது. மறுபக்கம் கதிர் வேலை செய்யும் ஹோட்டலிற்கு ஜீவா வருகிறார் அதனால் கதிர் அவர் கண்ணில் படாமல் மறைந்து கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கடைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் வேகமாக சாப்பிடுகிறார். அப்போது மூர்த்தி ஒன்றும் அவசரம் இல்லை மெதுவாக போகலாம் என சொல்கிறார். ஆனால் தனம் கடையில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்புகிறார். பாண்டியனை கூட்டிக் கொண்டு செல்கிறேன் என சொல்ல ஆனால் ஐஸ்வர்யா நான் பாண்டியனை பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். தனம் பரவாயில்லை என சொல்ல, மீனா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க கிளம்புங்கள் அக்கா என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் தனம் பாண்டியனை விட்டு விட்டு கடைக்கு கிளம்புகிறார். கடையில் ஒருவர் பில் தவறாக வந்ததாக சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தனம் வர என்ன நடந்தது என கேட்கிறார். அப்போது ஜீவா விவரத்தை சொல்ல தெரியாமல் நடந்துவிட்டதாக சொல்கிறார். தனம் மன்னிப்பு கேட்க இந்த பிரச்சனை சரியாகி விடுகிறது. பின் ஜீவா இவ்வளவு பெரிய விஷயத்தை சிக்கிரமாக முடிந்துவிட்டதாக சொல்ல தனம் நாம கோவப்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் சமையல் செய்ய சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கண்ணன் வந்து சமாதனம் செய்கிறார். பின் மீனா கிளம்பிவிட ஐஸ்வர்யா கண்ணனை சென்று வேலை விஷயமாக பார்க்க சொல்கிறார். பின் கண்ணன் வந்து மூர்த்தியிடம் நண்பரை பார்க்க சென்றுவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். பின் ஐஸ்வர்யாவும் மீனாவும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க அப்போது கண்ணன் வருகிறார். கண்ணன் என்ன இருவரும் இவ்வளவு சந்தோசமாக இருக்கீங்க என கேட்க என மீனா சொல்கிறார். பின் மீனா கிளம்பிவிட ஐஸ்வர்யா வேலை என்ன ஆனது என கேட்கிறார்.

கண்ணன் கிடைத்துவிடும் போல என சொல்ல ஆனால் வேலை கிடைக்க பணம் வேண்டும் என சொல்கிறார். எவ்வளவு என கேட்க 50 ஆயிரம் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா இது பற்றி வீட்டில் கேட்போம் என சொல்கிறார். அப்போது மீனா வர பேச்சை நிறுத்திவிடுகின்றனர். மீனா என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என கேட்க ஒன்றுமில்லை என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது மளிகை கடையில் இருந்து இன்னும் டெலிவரி வர வில்லை என ஓனர் சொல்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 27,000 வரை உயரும் அகவிலைப்படி!

மாஸ்டர் இப்போது வந்துவிடும் என சொல்ல அப்போது ஜீவா மளிகை கடையில் இருந்து பொருள்களை கொண்டு வருகிறார். பின் ஜீவா கதிர் வேலை பார்க்கும் ஹோட்டல் வந்து ஓனரிடம் பேசுகிறார். அப்போது கதிர் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க ஜீவாவை பார்க்காமல் இருக்கிறார். அந்த நேரம் ஜீவா எதோ பேச கதிர் ஜீவாவை பார்த்து ஒளிந்து கொள்கிறார். அப்போது கஸ்டமர் சாப்பாடு கேட்க கதிரை ஓனர் கூப்பிடுகிறார். ஆனால் கதிர் வராமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here