குடும்பத்தினர் வருகைக்காக காத்திருக்கும் கதிர், வீட்டிற்கு தெரியாமல் வந்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
குடும்பத்தினர் வருகைக்காக காத்திருக்கும் கதிர், வீட்டிற்கு தெரியாமல் வந்த மூர்த்தி - இன்றைய
குடும்பத்தினர் வருகைக்காக காத்திருக்கும் கதிர், வீட்டிற்கு தெரியாமல் வந்த மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
குடும்பத்தினர் வருகைக்காக காத்திருக்கும் கதிர், வீட்டிற்கு தெரியாமல் வந்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் புது கடை திறப்பு விழாவிற்கு குடும்பத்தினர் வருவார்களா என காத்துக் கொண்டிருக்கின்றார். பின் மூர்த்தி வீட்டில் பொய் சொல்லிவிட்டு கதிர் கடைக்கு வந்து சாப்பாடு வாங்கி செல்கிறார். கதிர் அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் இன்னைக்கு வெள்ளிக்கிழமை தான எப்போ நல்ல நேரம் என கேட்க தனம் எதற்கு கேட்கிறார் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா காலெண்டர் கொண்டு வந்து கொடுக்க நமக்கு எதற்கு அதெல்லாம் என கேட்கிறார். கண்ணன் நல்ல காரியம் எல்லாம் நல்ல நேரத்தில் தான் செய்வார்கள் என சொல்ல மூர்த்தி நான் காத்து வாங்கிட்டு நடந்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். தனம் எதற்கு நடக்க வேண்டும் என கேட்க, வீட்டில் இருக்கவே கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். தனம் தூரமாக நடக்க கூடாது என சொல்ல சும்மா பக்கத்தில் போய்விட்டு வருகிறேன் என சொல்கிறார். மீனா சந்தேகமாக கதிர் கடைக்கு போக போறாரோ என கேட்கிறார்.

ஜீவா அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார்.கண்ணன் தனத்திடம் நான் போய்விட்டு வரட்டுமா என கேட்க தனம் உனக்கு எதற்கு தேவை இல்லாத வேலை என கேட்கிறார். பின் மூர்த்தி கிளம்பி சென்றுவிடுகிறார். கண்ணன் ஜீவாவிடம் மீண்டும் நான் போய்விட்டு வரட்டுமா என கேட்க மீனா மாமாவிற்கு பிடிக்கவில்லை யாரவது போனீங்க என்றால் நான் சொல்லிவிடுவேன் என சொல்கிறார். பின் ஜீவா கடைக்கு கிளம்ப கண்ணன் கதிர் கடைக்கு போறிங்களா என கேட்கிறார். ஜீவா இல்லை என சொல்ல நான் போறேன் என் சொல்லிவிட்டு கண்ணன் கிளம்புகிறார்.

Exams Daily Mobile App Download

கண்ணன் கடை திறப்பு விழாவில் குடும்பத்தினர் வருவார்களா என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார். வாசலில் பார்த்து கொண்டிருக்க ஆனால் யாரும் வரவில்லை. பின் கதிரின் நண்பர் வந்து தெரு முனை வரை பார்த்துவிட்டேன் யாரும் வரவில்லை மாமா சொல்வது போல நல்ல நேரம் போய்விட போகுது என சொல்கிறார். பின் முல்லை அம்மா அழைக்காமல் வந்தவர்களை மதிக்கவில்லை. வராதவர்களை எதிர்பார்த்து இருப்பதாக சொல்கிறார். கடைக்கு சிலர் சாப்பிட வர கதிர் இன்னும் பால் காய்ச்சவில்லை என சொல்கிறார்.

கடைக்கு வந்தவர்களை திருப்ப அனுப்ப முடியாது என முல்லை சொல்ல கதிர் பால் காய்ச்ச சொல்கிறார். பின் கதிரும் முல்லையும் நல்லபடியாக பால் காய்ச்சி முடிக்கின்றனர். கதிர் அப்போது கூட வாசலை பார்த்துக் கொண்டிருக்கிறார். முல்லை விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார். கதிர் வாசலை பார்த்துக் கொண்டிருக்க மூர்த்தி அந்த பக்கம் வருகிறார். கதிர் கடையை பார்த்து சந்தோசப்பட, கதிர் வெளியே வருவதை பார்த்து மூர்த்தி மறைந்து கொள்கிறார். பின் சாப்பாடுகளை எடுத்து வைக்க மூர்த்தி பாண்டியன் மெஸ் என பெயரை பார்த்து நல்லபடியாக வர வேண்டும் என நினைக்கிறார்.

பின் மூர்த்தி ஒரு குழந்தையிடம் பணம் கொடுத்து சாப்பாட்டு வாங்கி வர சொல்கிறார். பின் கதிரிடம் அந்த குழந்தை வந்து பணம் கொடுக்க முல்லை அப்பா குழந்தையும் தெய்வமும் ஒன்று அதனால் பணம் வாங்கி கொண்டு தொழிலை தொடங்குங்கள் என சொல்கிறார். முல்லை பணத்தை வாங்கி கொண்டு சாப்பாடு கொடுக்கிறார். பின் வெளியே வந்து பார்க்க மூர்த்தி சாப்பாடு வாங்குவதை பார்க்கிறார். கதிர் மூர்த்தி வந்ததை நினைத்து சந்தோசப்பட மேலும் சில சாப்பாடுகளை எடுத்து குழந்தையிடம் கொடுத்து அனுப்புகிறார்.

பாக்கியா வீட்டில் இருக்க சொல்லும் குடும்பத்தினர், இனியாவை முடிவு செய்ய சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

பின் மூர்த்தி கதிரை பார்த்து சந்தோஷத்தில் இருக்க மூர்த்தி கதிரை பார்த்துவிட்டு கிளம்புகிறார். கதிரும் முல்லையும் மூர்த்தி வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் மூர்த்தி கிளம்ப அந்த பக்கமாக ஜீவா வருகிறார். அதை பார்த்து மூர்த்தி ஓரமாக மறைந்து கொள்கிறார். பின் ஜீவா கதிர் கடை பக்கமாக சென்றுவிடுகிறார். பின் மூர்த்தி சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டிற்கு வர, அங்கே கண்ணன் ஐஸ்வர்யா மீனா என அனைவரும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!