கண்ணன் வேலைக்கு பணம் கொடுத்த குடும்பம், ஐஸ்வர்யா உடன் சண்டையில் வீட்டை விட்டு சென்ற மீனா – இன்றைய எபிசோட்!

0
கண்ணன் வேலைக்கு பணம் கொடுத்த குடும்பம், ஐஸ்வர்யா உடன் சண்டையில் வீட்டை விட்டு சென்ற மீனா - இன்றைய எபிசோட்!
கண்ணன் வேலைக்கு பணம் கொடுத்த குடும்பம், ஐஸ்வர்யா உடன் சண்டையில் வீட்டை விட்டு சென்ற மீனா - இன்றைய எபிசோட்!
கண்ணன் வேலைக்கு பணம் கொடுத்த குடும்பம், ஐஸ்வர்யா உடன் சண்டையில் வீட்டை விட்டு சென்ற மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிருக்கு பிரசாதம் தீர்ந்துவிட மூர்த்தி தன்னுடைய பிரசாதத்தை கொடுக்கிறார். கதிர் அதை எடுத்து சாப்பிடுகிறார். பின் கண்ணனிற்கு பணம் கொடுக்க மீனா ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுகிறார். மறுபக்கம் மீனா கோவத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கோவிலில் பிரசாதம் வாங்க காத்திருக்க அப்போது அவருக்கு மட்டும் பிரசாதம் காலியாகிவிடுகிறது. அதனால் மூர்த்தி தனக்கு கொடுத்த பிரசாதத்தை வைத்துவிட்டு வருகிறார். அதை கதிர் எடுத்து சாப்பிட தனம் வந்து பார்த்து சந்தோசப்படுகிறார். மறுபக்கம் மீனா ஜீவாவிடம் கோவிலில் நடந்தது பற்றி சொல்கிறார். கதிர் வந்தது பற்றியும் மூர்த்தி பிரசாதம் கொடுத்தது பற்றி சொல்ல, ஜீவா நானும் வந்திருக்கலாம் என சொல்கிறார். இந்த வீட்டில் எல்லாரும் கதிருடன் பேசிட்டார்கள் என மீனா சொல்கிறார்.

பின் இருவரும் எவ்வளவு சந்தோசமாக இருக்காங்க இந்த வீட்டில் இருக்கும் போது இருவரும் ஒண்ணா சேர்ந்து வெளியே போயிருக்காங்களா? இப்போது பார்த்தீங்களா, பேசாமல் நாமளும் தனியாக போய்விட்டால் இப்படி தான் நடக்கும் என மீனா சொல்ல, ஜீவா எதையாவது காரணமாக சொல்லி பேசுற என சொல்கிறார். அவனே எப்போது திரும்ப வருவான் என நாங்க யோசித்து கொண்டிருக்கிறோம், நீ தேவை இல்லாமல் பேசாதே என சொல்கிறார். இனிமேல் இப்படி பேசினால் கடுப்பாகிவிடுவேன் என சொல்கிறார்.

மறுபக்கம் தனம் கடைக்கு கிளம்ப, ஜீவாவிடம் கடை வேலை பற்றி மூர்த்தி கேட்கிறார். பின் ஐஸ்வர்யா, வேலை விஷயமாக பணம் கேட்டேனே என சொல்ல, தனம் மதியம் கடைக்கு வந்துவிடு என சொல்கிறார். மூர்த்தி, வேலைக்கு போற இடத்தில் விசாரித்து கொடுக்கலாமே என சொல்ல, கண்ணன் நம்பிக்கையான ஆளு தான் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா, மாமா வேலை போடுபவர் தெரிந்தவர் தான் என சொல்ல, மூர்த்தி பணம் விஷயத்தில் யாரையும் நம்ப முடியாது நல்லா விசாரித்தால் நல்லது தான் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கண்ணனிடம், காசு கொடுத்தால் கண்டிப்பாக வேலை போட்டு கொடுப்பார்களா என கேட்க, அதெல்லாம் கொடுத்துருவாங்க என கண்ணன் சொல்கிறார். ஜீவா, நீ பணம் கொடுக்க போகும் போது நானும் வரேன் என சொல்ல, ஐஸ்வர்யா வெறும் 50 ஆயிரம் தான கண்ணன் கொடுத்துருவான் என சொல்கிறார். பின் தனம் அவன் சின்ன பையன் என சொல்லி ஜீவாவை போக சொல்கிறார். பின் ஐஸ்வர்யா இதில் கூட உன்னை நம்ப மாட்டாங்களா என கேட்க, பணம் கொடுக்கிறார்கள் அப்பறம் என்ன என கண்ணன் சொல்கிறார்.

ஐஸ்வர்யா அதை பற்றியே நினைத்து கொண்டிருக்க கண்ணனிடம் சத்தம் போடுகிறார். அப்போது மீனா வந்து என்ன சத்தம் என கேட்க கண்ணனை இந்த பணத்திற்கு கூட நம்பவில்லை என சொல்ல, ஜீவா இருக்கும் வேலையை விட்டுவிட்டு கண்ணனிற்காக தான போறான் என சொல்ல, ஜீவா மாமாவிடம் பணம் கொடுத்துவிட்டு அக்காவும் மாமாவும் கூட வந்தால் எப்படி இருக்கும் என சொல்ல, ஜீவா தான் பொறுப்பாக இருக்கானே என மீனா சொல்கிறார். மாமாவிற்கு உடம்பு சரியான பின் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என ஐஸ்வர்யா சொல்ல, மீனா பெரிய ஜமீன் குடும்பத்தில் இருந்து வந்தது போல பேசாதே என சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா ஆமாம் நான் ஜாமீன் குடும்பம் இல்லை தான் நீங்க எதற்கு இங்கே வந்தீங்க என கேட்கிறார். பின் இருவருக்கும் சண்டை வர முல்லை இதெல்லாம் தெரிந்து தான் வெளியே சென்றுவிட்டார், தம்பிக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து என் புருஷன் எல்லாம் செய்தால் இப்படி தான் செய்வீங்க என சொல்லிவிட்டு கயலை தூக்கி கொண்டு மீனா வீட்டை விட்டு செல்கிறார். கண்ணன் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க, நான் என்ன செய்தேன் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

விவாகரத்து பெற்ற கோபி பாக்கியா, கடுப்பில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மீனா கயலை தூக்கி கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கே மீனாவின் அம்மா கயலை கொஞ்ச பின் எப்படி வந்தாய் என மீனாவின் அம்மா கேட்கிறார். எங்க வீட்டில் காரா இருக்கிறது ?என மீனா கேட்கிறார். பின், நடந்து வந்த புள்ளைக்கு மோர் கொடு என மீனாவின் அப்பா சொல்ல மீனாவின் அம்மா மோர் எடுக்க செல்கிறார். அப்போது மீனா அந்த ஐஸ்வர்யாவுடன் ஒரே தொல்லையாக இருக்கிறது தினமும் சண்டை போட முடியவில்லை என சொல்ல மீனாவின் அப்பா கோபப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!