தனி குடித்தனம் போக நினைக்கும் மீனா, ஜீவாவை கடைக்கு வர வைக்கும் ஜனார்த்தனன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனி குடித்தனம் போக நினைக்கும் மீனா, ஜீவாவை கடைக்கு வர வைக்கும் ஜனார்த்தனன் - இன்றைய
தனி குடித்தனம் போக நினைக்கும் மீனா, ஜீவாவை கடைக்கு வர வைக்கும் ஜனார்த்தனன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனி குடித்தனம் போக நினைக்கும் மீனா, ஜீவாவை கடைக்கு வர வைக்கும் ஜனார்த்தனன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா, கடையில் வேலை அதிகமாக இருப்பதால் இனிமேல் கடைக்கு வரமாட்டேன் என சொல்கிறார். பின் ஜீவாவிடம் நான் இனிமேல் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் தனியாக வீடு பார்த்து சென்றுவிடுவோம் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கடையில் வேலை அதிகமாக இருந்ததாக ஜீவாவிடம் சொல்கிறார். நான் தான் சொன்னேன்ல உனக்கு கடை வேலை எல்லாம் செட் ஆகாது என ஜீவா சொல்ல, நான் இனிமேல் கடைக்கு வரமாட்டேன் என மீனா சொல்கிறார். கடை வேலையும் பார்க்க முடியாது வீட்டு வேலையும் பார்க்க முடியாது என்றால் என்ன அர்த்தம் என ஜீவா கேட்க என்னமோ என்னால் தான் இந்த வீட்டில் பிரச்சனை வருவது போல பேசுகிறாய் என மீனா கேட்கிறார். இரண்டும் முடியவில்லை என சொன்னால் யார் மீது தவறு என ஜீவா கேட்கிறார். உங்க இருவரின் சண்டையை நினைத்து அண்ணி கடையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்.

அண்ணனும் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். உங்களுக்கு எப்போது சண்டை நடக்கும் என அண்ணன் காத்துக் கொண்டிருக்கிறார் என சொல்ல, வீடு என்றால் அப்படி தான் இருக்கும் என ஜீவா சொல்கிறார். பின் மீனா என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது நான் கயலை தூக்கி கொண்டு என் அப்பா வீட்டிற்கு போறேன் உனக்கு தேவை என்றால் வந்து பார் இல்லை என்றால் நாம தனியாக போய்விடுவோம் என சொல்கிறார். முன்னாடி தான் வீடு பிரிய கூடாது என இருந்தார்கள். ஆனால் இப்போது கதிர் சென்றுவிட்டார் அது போல நாமளும் சென்று விடுவோம் என மீனா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் ஒன்று என் அப்பா வீட்டிற்கு சென்றுவிடுவோம். இல்லை என்றால் தனியாக இருப்போம் என சொல்ல, இனிமேல் இப்படி பிரச்சனை வந்தால் நான் எல்லார் முன்னாடியும் சொல்லிவிடுவேன் என மீனா சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா மற்றும் மீனா சண்டை போட தொடங்க தனம் வந்து வேலைகளை பிரித்து கொடுக்கிறார். உங்களை நம்பி நான் கடைக்கு போகலாமா என கேட்க ஐஸ்வர்யா சரி என சொல்கிறார். பின் மீனாவும் சரி என சொல்கிறார். மறுபக்கம் மீனாவின் அப்பா மேனஜர் வீட்டிற்கு வருகிறார்.

அவர் இருக்கும் வேலைகளை எல்லாம் சொல்ல, மீனாவின் அப்பா எல்லா வேலையும் நானே பார்த்தால் நீங்க எல்லாரும் என்ன வேலை பார்ப்பீர்கள் என கேட்கிறார். பின் மீனாவின் அப்பா நீயே எல்லாத்தையும் பார்த்துவிடு என சொல்கிறார். கலை எல்லா வேலைகளையும் நீங்க தான் பார்க்க வேண்டுமா என கேட்க ஆமாம் என்ன செய்வது மாப்பிள்ளை வந்து பார்த்தால் நான் அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன் நானும் பல முறை சொல்லிவிட்டேன் ஆனால் அவர் கேட்பதாக இல்லை. நாம கஷ்டப்பட்டு சம்பாரிப்பது எல்லாம் பின்னாடி அவருக்கு தான என சொல்ல, அங்கையும் அவருடைய அண்ணனிற்கு முடியாமல் இருக்கிறது என கலை சொல்ல, நான் இங்கையே வர சொல்லவில்லை.

மாப்பிள்ளை வந்து ஒரு நாள் இருந்து என்ன என்று பார்த்துவிட்டு போகலாம் என சொல்கிறார். கலை, மாப்பிள்ளை அந்த குடும்பத்தை விட்டு வரவா போகிறார் என கேட்க, வந்தால் என்ன என ஜனார்த்தனன் கேட்கிறார். நடக்கும் காரியத்தை பேசுங்க என கலை சொல்ல, ஒரு தம்பி போய்ட்டான் இந்த குடும்பத்தை இவர் தான் தூக்கி நிறுத்த போகிறார் என கலை கேட்க, இப்படியே நான் அலைச்சலில் இருந்தால் சீக்கரம் போய்விடுவேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். இத்தனை தொழில் எதற்கு செய்ய வேண்டும் என கலை கேட்க, அதற்காக தொழிலை விட முடியாது என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்க முடியாது என சொன்னார்கள், இப்போது முடிந்தது தான அது போல மாப்பிள்ளையும் வருவார் என மீனாவின் அப்பா சொல்கிறார்.

கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பிய பாக்கியா, வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

பின் கண்ணன் வீட்டில் இருக்க மீனாவின் அப்பா அம்மா பார்க்க வருகிறார்கள். மூர்த்தியிடம் உடல்நிலை பற்றி கேட்க 2 மாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என டாக்டர் சொன்னதாக சொல்கிறார். ஆமாம் மூர்த்தி, நானும் டாக்டரை பார்க்க போனேன் ஆனால் அதை செய்யாதே இதை செய்யாதே என சொன்னதாக ஜனார்த்தனன் சொல்கிறார். மீனா, டாக்டர் சொன்னதை கேளுங்கள் என சொல்ல, என் வேலை எல்லாம் அப்போ யார் செய்வது என ஜனார்த்தனன் கேட்கிறார். மீனா அப்பா, வயசாகிவிட்டது என சொல்ல, மூர்த்தி அதெல்லாம் இன்னும் சில வருடங்கள் நீங்க தொழில் செய்யலாம் என சொல்கிறார். பின் மூர்த்தி இங்கேயும் ஆள் இல்லாததால் ஜீவா வர முடியவில்லை என சொல்ல, மீனா அப்பா, இப்படியே வேலை செய்தால் நான் சீக்கரம் இறந்துவிடுவேன் என சொல்கிறார். அதனால் மூர்த்தி நான் ஜீவாவை வந்து பார்த்துக் கொள்ள சொல்கிறேன் என சொல்கிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here