நைட்டி விஷயத்தில் மீனாவை புலம்ப விட்ட கண்ணன், ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோடு!

0
நைட்டி விஷயத்தில் மீனாவை புலம்ப விட்ட கண்ணன், ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோடு!
நைட்டி விஷயத்தில் மீனாவை புலம்ப விட்ட கண்ணன், ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோடு!
நைட்டி விஷயத்தில் மீனாவை புலம்ப விட்ட கண்ணன், ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோடு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நைட்டி போடும் மீனாவை கண்டு கண்ணன் கலாய்க்க அதை நினைத்து மீனா புலம்புவதை போல அடுத்த எபிசோடுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் சுமார் 750 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விறுவிறுப்பாகவும், ஸ்வாரசியமாகவும் இல்லாமல் கதையின் போக்கில் பயணித்து வருகிறது. இப்படி சமீபத்திய எபிசோடுகள் மூலம் சலிப்பை உண்டாகி இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதலாக அமைந்திருப்பது மீனா கதாப்பாத்திரம் செய்யும் குட்டி குட்டி கலாட்டாக்கள் தான்.

எழில் எழுதிய கடிதத்தால் நின்று போன தேவியின் திருமணம், வருத்தத்தில் கயல் – இன்றைய “கயல்” சீரியல் எபிசோட்!

இந்த சீரியலில் வில்லியாகவும் இல்லாமல் முழு நகைச்சுவை கதாப்பாத்திரமுமாக இல்லாமல் இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை வகித்து வருவது மீனா மட்டும் தான். இவரால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாவதும், தீர்வுகள் கிடைப்பதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா நைட்டி போடுவதை கண்டு பொறாமை கொள்ளும் மீனா தனத்திடம் இருந்து குற்றம் கண்டுபிடிக்க ஏதேதோ விஷயங்களை செய்கிறார். ஆனால் ஒன்றும் அவருக்கு கை கொடுக்காத நிலையில், தானே ஒரு நைட்டியை அணிந்து கொண்டு புது கலவரத்தை உருவாக்க திட்டமிடுகிறார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

ஆனால் இதுவும் கடைசியில் நகைச்சுவையாக முடிந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது நைட்டி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வலம் வரும் மீனாவை பார்த்து கண்ணன் சிரிக்கிறார். இதனால் தான் நைட்டியில் அசிங்கமாக இருப்பதாக நினைத்து கொள்ளும் மீனா கண்ணாடியில் தன்னை தானே திரும்ப திரும்ப பார்த்து கொள்கிறார். மறுபக்கத்தில் மீனா தனக்கு போட்டியாக நைட்டி போட்டு கொண்டு வருவது பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா அவரை பாராட்டுவது போல வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here