ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

0
ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோடு!
ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோடு!
ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நைட்டி போடும் ஐஸ்வர்யா ரூல்ஸ் பிரேக் செய்வதாக கூறி மீனா அட்வைஸ் செய்ய, அது காமெடியாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா கண்டுக்காமல் செல்வது போல இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வழக்கமான கதைக்களத்துடன் எந்தவொரு ஸ்வாரசியமும் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் ஒரு முக்கிய இடத்திற்கு வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க அவர்களுக்கு வரப்போகும் மனைவிகள் அந்த குடும்பத்தின் ஒற்றுமையை கட்டி காப்பாற்றுவார்களா என்பது தான் இந்த சீரியலின் கதை சுருக்கம் ஆகும்.

தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – இணையத்தில் வைரல்!

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திருமணம் ஆகிறது. புதிய மருமகள்களும் அந்த வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில் தனம் மற்றும் முல்லை இருவரும் ஏறத்தாழ ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இருக்க, மீனா மற்றும் வித்தியாசப்பட்டிருந்தார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சனைகள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் அந்த குடும்பத்தின் வழக்கங்களுக்கு சில நேரம் எதிர்த்து நிற்கும் மீனா கதாப்பாத்திரம் தான் இந்த சீரியலின் வில்லியாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தது.

இப்படி இருக்க தற்போது கண்ணனின் மனைவியாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணைந்துள்ள ஐஸ்வர்யா, மீனாவை மிஞ்சும் அளவுக்கு சில விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி கொண்டிருக்கும் எபிசோடில் நைட்டி அணிந்து வலம் வரும் ஐஸ்வர்யா மூலமாக அந்த வீட்டில் சிறிய பிரச்சனைகள் எழ ஆரம்பித்திருக்கிறது. அதாவது, நைட்டி அணிந்து வரும் ஐஸ்வர்யாவை மீனா தனியே அழைத்து கொண்டு போய், இப்படியெல்லாம் நீ செய்யக்கூடாது. இந்த வீட்டின் சட்டதிட்டங்களை மீறுகிறாய்.

பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” பரீனாவின் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

நாங்கள் ஒருவரும் இங்கே நைட்டி அணிவதில்லை. அதனால் நீயும் இது போல இருக்க கூடாது என மீனா பேச நீங்கள் பேசுவது காமெடியாக இருக்கிறது ஐஸ்வர்யா கேலியாக பதில் சொல்வது போல சில காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பிடித்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், மீனாவுக்கு இந்த அட்வைஸ் எல்லாம் செட் ஆகவில்லை என்றும் நமக்கு தான் இந்த சீரியஸான முகம் எல்லாம் செட் ஆகாதுல மீனா, அப்பறம் எதுக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!