‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா - ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தனம் வேடத்தில் நடித்து வரும் சுஜிதா, தற்போது சீரியலில் இருந்து சற்று விலகி விடுப்பு எடுத்துள்ளார்.

சுஜிதாவின் வீடியோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அது ஒரு கூட்டு குடும்ப கதை என்பது தான். தற்போதைய காலகட்டத்தில் கூட்டு குடும்பம் என்பது மிகவும் அரிதான விஷயமாகி விட்டது. இதனால் மக்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை அதிக அளவில் ரசித்து வருகின்றனர். அதில், உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அபார்ஷன் பற்றி பேசிய ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா பரினா – ரசிகையின் கேள்விக்கு பதில்! வைரலாகும் பதிவு!

அதிலும், குறிப்பாக தனம் அண்ணியாக வரும் சுஜிதாவின் நடிப்பு அனைவராலும் பேசப்படுகிறது. தனம் அண்ணி வேடம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்று சுஜிதாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கன்னட சீரியலிலும் சுஜிதா தான் இந்த வேடத்தில் நடிக்கிறார். சுஜிதா அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அடிக்கடி ஏதேனும் புதிய பதிவுகளை வெளியிட்டு வருவார்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில், தற்போது சுஜிதா தனது மகனுடன் தூத்துக்குடி எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் சொந்த வீட்டை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டு சுஜிதா சென்றுள்ளது. முதலில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினாலும், சில நாட்கள் தான் விடுமுறை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர். அந்த வீட்டை சுற்றி பார்த்து மிகவும் ஆச்சர்யமடைந்த சுஜிதா அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here