‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகும் தனம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு விலகும் தனம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு விலகும் தனம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகும் தனம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணியாக நடித்து வரும் தனம் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதனால், தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிவிட்டாரா என பேச்சுவார்த்தை எடுபட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிரும் முல்லையும் எப்படி 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்ன தான் மூர்த்தி கதிரின் மீது கோவமாக இருந்தாலும் தனம் அவ்வப்போது கதிரின் வீட்டிற்கு சென்று வருவது, கதிர் மற்றும் முல்லை இருவருக்குமே ஆறுதலாக இருந்து வருகிறது. மேலும், கதிர் மற்றும் முல்லை புதிதாக துவங்கப்பட்டுள்ள ஹோட்டலில் லாபம் பெரிதளவில் இல்லாமல் வியாபாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கர்ப்பமாகும் வெண்பா, பாரதிதான் தந்தையா ? அதிரடி திருப்பங்கள்!

குறைந்தளவு லாபத்தை வைத்து எவ்வாறு கடனை அடைக்க போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், சீரியலில் நடித்தது போக மீத நேரம் முழுவதையும் அரட்டை அடித்தே விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்கள் போக்குகின்றனர். அது மட்டுமல்லாமல் சீரியலில் அடிக்கும் அரட்டைகள், விளையாட்டுகள் என அனைத்தையும் சமூக வலைப்பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் ஹேமா மற்றும் தனம் இருவருமே யூடியூப் சேனல் வைத்திருக்கின்றனர்.

ஏதாவது வெளியூர் சென்றாலோ அல்லது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கின் போது எதாவது சமைத்தாலோ அதனை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தனம் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனம் தனது மகனுடன் என்ஜாய் செய்யும்படியான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இதற்கு நடுவே தனம் அமெரிக்கா சென்றுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் பலரும் கேட்டபடி இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!