‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் அண்ணி சுஜிதா – ஹோட்டல் மெஸ் விசிட்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் அண்ணி சுஜிதா - ஹோட்டல் மெஸ் விசிட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் அண்ணி சுஜிதா - ஹோட்டல் மெஸ் விசிட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் அண்ணி சுஜிதா – ஹோட்டல் மெஸ் விசிட்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா சென்னையில் உள்ள திருநெல்வேலி மெஸ் என்ற பிரபலமான ஹோட்டலுக்கு சென்று அங்கு நடக்கும் சில விஷயங்களுடன், முக்கியமான தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகையாக இருந்து தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை சுஜிதா. கேரளாவை சேர்ந்த நடிகை சுஜிதா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இருந்தாலும் தற்போது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி – அடுத்த ட்விஸ்டு!

சீரியலில் நடிப்பதுடன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா, கதைகேளு கதைகேளு என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் வித்தியாசமான கான்சப்ட் உள்ள பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை சுஜிதா தற்போது சென்னையில் உள்ள திருநெல்வேலி மெஸ் என்ற பிரபலமான ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள ஸ்பெஷல் சாப்பாடு, சமைக்கும் விதம் உள்ளிட்ட சில விஷயங்களை ஒரு வீடியோவாக எடுத்து அதனை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் புதிய ட்விஸ்ட்!

இந்த வீடியோவில் கடையை நடத்தி வரும் நபர் பேசும் போது, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வரும் இசைஞானி இளையராஜா அந்த கடையில் வந்து சாப்பாடு வாங்கி செல்வதாக கூறியுள்ளார். அதே போல திரையுலக பிரபலங்களான தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஆர்.சுந்தர ராஜன், எஸ் ஜே சூர்யா, ஏ ஆர் முருகதாஸ், ராதாரவி, விவேக், வடிவேலு, ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவதாகவும், சாப்பாடு வாங்கி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தை நடிகை சுஜிதா அந்த வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!