விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மூர்த்தி, ஸ்டாலின் முத்துவிற்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மூர்த்தி, ஸ்டாலின் முத்துவிற்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன கண்ணன்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மூர்த்தி, ஸ்டாலின் முத்துவிற்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூத்த அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் முத்து அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் குடும்ப கதை கொண்ட சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பிகள் என நான்கு பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பதே சீரியலின் கூடுதல் சிறப்பு, என்ன தான் அடிக்கடி அவர்களுக்கு இடையே சண்டை வந்தாலும் அடுத்த நாளே அதை எல்லாம் மறந்து குடும்பத்தை தாங்கி பிடித்து இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்துடன் வெளியேறிய அமீர்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

கதைக்கு ஆணி வேராக மூத்த அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார். அவரை பல சீரியல்களில் பார்த்திருப்போம். ஆனால் அந்த சீரியல்கள் கொடுக்காத புகழை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்துள்ளது. இவர் 12 வருடங்களாக சின்னத்திரையில் இருக்கிறார். இவர் சினிமாவில் கொட்டிகட்டி பறந்த இயக்குனர் பாரதிராஜாவின் சொந்த அண்ணன் மகன் ஆவார். இவர் முதன்முறையாக கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான தெற்கத்திப் பொண்ணு சீரியலில் அறிமுகமானார்.

ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இவருக்கு இன்று பிறந்தநாள். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் சீரியலில் அவருடைய நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!