மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் மணக்கோலத்தில் இணைந்த தீபிகா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனுடன் மணக்கோலத்தில் இணைந்த தீபிகா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனுடன் மணக்கோலத்தில் இணைந்த தீபிகா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் மணக்கோலத்தில் இணைந்த தீபிகா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்த தீபிகா முகப் பருவின் காரணமாக சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது கண்ணனுடன் தீபிகா மணக்கோலத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மேலும், இந்த தொலைக்காட்சி சீரியல்கள் மூலமாகவே பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் விரைவில் மக்களின் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் தீபிகா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருந்தார்.

கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அதற்கு பிறகு தீபிகாவிற்கு முகப்பரு பிரச்சனை இருந்த காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தீபிகா நடித்திருப்பார். மூன்று மாதங்களிலேயே எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்துவிட்டார். அதாவது கண்ணன் மற்றும் தீபிகாவின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தீபிகா சீரியலில் இருந்து வெளியேறியதற்கு பிறகு அவருக்கு பதிலாக சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால், கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா மட்டுமே சரியாக இருப்பார் மீண்டும் தீபிகாவையே நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் கேட்டு கொண்டனர். சீரியலில் இருந்து தீபிகா வெளியேறிய பிறகும் கூட கண்ணனுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார். தற்போது கூட கண்ணனுடன் சேர்ந்து ஒரு போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணன் மற்றும் தீபிகாவின் ஜோடியை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here