விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? ஷாக் ஆக்கிய தகவல்கள்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைக்குட்டி கண்ணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் பற்றிய சில ஸ்வாரசியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

நடிகர் சரவண விக்ரம்

இன்றைய காலத்தில் சினிமா நடிகர், நடிகைகளை போலவே சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர். சொல்லப்போனால் டிவி சேனல்களில் ஓரிரு முறை தலை காட்டுபவர்களுக்கே சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ஃபேன் பாலோயர்கள் உருவாகிறார்கள். அதனால் சீரியல்களில் நடிப்பவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்படி, தான் நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் ரசிகர்களின் ஏகப்பட்ட வரவேற்புகளுக்கு சொந்தக்காரராக மாறி இருப்பவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவண விக்ரம்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். இவரது கதாப்பாத்திரம் குடும்பத்தின் கடைசி மகனாக, அண்ணன் அண்ணிகளின் செல்லப்பிள்ளையாக காட்டப்பட்டு வந்தாலும் அவ்வப்போது இவரது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக லட்சுமி அம்மாவின் இறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் இவரது கதாப்பாத்திரம் அதிகமான அளவு கவனம் ஈர்த்திருந்தது. இப்படிப்பட்ட வரவேற்புகளை பெற்று வரும் நடிகர் சரவண விக்ரம் ஜூன் 28, 1995ல் தேனி மாவட்டத்தில் பிறந்திருக்கிறார்.

ஏப்ரல் 1 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு, இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!

தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் உள்ள வித்யா விகாஸ் என்ற பள்ளியில் படித்துள்ள சரவண விக்ரம் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். கல்லூரி படிப்பை முடித்ததும், முதல் முறையாக கண்மணி என்ற குறும்படத்தின் மூலம் 2017ம் ஆண்டு மீடியாவுக்குள் நுழைந்த சரவண விக்ரம், தொடர்ந்து ரவுத்திரம் பழகு, கரம், பகுத்தறிவு உள்ளிட்ட சில குறும்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடிகர் பப்புவின் நண்பராக ஒரேயொரு எபிசோடில் மட்டும் நடித்திருந்த சரவண விக்ரமிற்கு, இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று கொடுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here