பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் - ரசிகர்கள் வாழ்த்து!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் - ரசிகர்கள் வாழ்த்து!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் – ரசிகர்கள் வாழ்த்து!

பல நூறு எபிசோடுகளை கடந்தும் மக்களிடத்தில் ஆதரவை பெற்று வருகிற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி தம்பி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட முக்கிய நட்சத்திரத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணன் வீட்டில் விஷேசம்:

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என சிறந்த குடும்ப கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரால் பல குடும்பங்கள் இணைந்துள்ள தகவல் வெளியாகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த வருடம் விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் விருதும் இந்த தொடருக்கு கிடைத்தது. இவ்வாறு 3 வருடங்களை கடந்தும் தனக்கான இடத்தை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து அதிக பார்வையாளர்களையும், ரசிகர்களிடத்தில் ஆதரவையும் பெற்று டாப் சீரியல் ஆக விளங்கி வருகிறது.

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

மேலும் இந்த சீரீயலுக்கான ஸ்பெஷல் என்னவென்றால் எந்த மொழியின் மறு ஆக்கமும் இல்லாமல் தமிழிலே உருவாகிய நாடகம் என்பது தான். சமீப நாட்களாக முல்லையை குறித்தே தொடர் நகர்கிறது. இவ்வாறு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுறது போல நான்கு அண்ணன், தம்பிகளை சுற்றியே கதைக்களம் இருக்கும். தற்போது சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இந்நிலையில் கடைக்குட்டி தம்பி கண்ணன் ஆக நடித்து வரும் நட்சத்திரம் சரவண விக்ரம் வீட்டில் விஷேசம் ஒன்று நடந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது சரவண விக்ரம் அவர்களின் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அந்த விசேஷத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவற்றில் ஒரு புகைப்படத்தை சரவணன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனம் அண்ணியாக நடித்து வரும் சுஜிதா, கண்ணனுக்கும் அவரது தங்கைக்கும் நடுவில் நின்று போஸ் கொடுத்திருக்கும் போட்டோ பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here