கண்ணனின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

0
கண்ணனின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் - வைரலாகும் வீடியோ!
கண்ணனின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் - வைரலாகும் வீடியோ!
கண்ணனின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தங்கை நிச்சயதார்த்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலுள்ள தனம், மூர்த்தி, ஜீவா, மீனா என அனைவரும் கலந்துகொண்டு அரட்டை அடிக்கும் படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ஒவ்வொருவரின் வீட்டிலும் அன்றாடம் நடைபெறும் காதல் காட்சிகள், சண்டைகள், பாசப் போராட்டங்கள் என அனைத்தையும் படம் போட்டு காட்டுவதால் மக்கள் அதிகமாக விரும்பி இந்த சீரியல்களைப் பார்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அறிமுகமாகும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருமே கூடிய விரைவிலேயே ரசிகர்கள் வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகின்றனர் . டிஆர்பி யிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முதல் 5 இடத்தை பெற்று வருகின்றன.

வீட்டில் தொடர்ந்து சண்டை போடும் மீனா – வீட்டை விட்டு வெளியேறும் கதிர்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும் சீரியல் என்றால் அது நிச்சயமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மூர்த்தி, தனம், முல்லை, கதிர், ஜீவா, கண்ணன் என அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். அவ்வப்போது சூட்டிங்கில் அரட்டைகள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்பத்தின் மருமகளான முல்லை, தனம் மற்றும் மீனா மீனா மூவரும் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று ரசிகர்களிடையே செல்பி எடுத்துக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.

Exams Daily Mobile App Download

தற்போது கண்ணனின் தங்கை நிச்சயதார்த்தத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலுள்ள அனைவருமே சென்றுள்ளனர். கண்ணனும் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. தற்போது கண்ணனின் தங்கை நிச்சயதார்த்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலுள்ள தனம், முல்லை, மூர்த்தி, கதிர்,ஜீவா என அனைவரும் கலந்து கொண்ட படியான வீடியோ சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!