‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் & ஐஸ்வர்யா விஜே தீபிகா நிஜ காதலர்களா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகாவுடன் இணைந்து வெளியிடும் சில பதிவுகள், அவர்கள் நிஜ காதலர்களா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த ஒரு சில எபிசோடுகளாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கியமான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் சிறுக, சிறுக சேமித்து கட்டிய கடையை பூட்டி, சீல் வைத்த அதிகாரிகள் அதனை இடித்து தள்ளுவதாக எச்சரிக்கை விடுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அந்த கடையை மீட்க போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். இவருக்கு ஜோடியாக கடந்த ஒரு சில மாதங்கள் வரை ஐஸ்வர்யாவாக நடித்திருந்தவர் விஜே தீபிகா. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இந்த கண்ணன், ஐஸ்வர்யா ரீல் ஜோடிக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்து வந்தது. இதற்கிடையில் விஜே தீபிகா தீடீரென ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகி இருந்தாலும் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர்.
‘குக் வித் கோமாளி’ இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் அதிர்ச்சி!
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள், போட்டோசூட் புகைப்படங்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெறுவது வழக்கம். இப்போது, இயக்குனர் மற்றும் கதாசிரியராக மாறி சரவண விக்ரம், விஜே தீபிகா வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இதனுடன் அவ்வப்போது சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரையும் ஜோடியாக பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.