வீட்டில் தொடர்ந்து சண்டை போடும் மீனா – வீட்டை விட்டு வெளியேறும் கதிர்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
வீட்டில் தொடர்ந்து சண்டை போடும் மீனா - வீட்டை விட்டு வெளியேறும் கதிர்! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
வீட்டில் தொடர்ந்து சண்டை போடும் மீனா - வீட்டை விட்டு வெளியேறும் கதிர்! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
வீட்டில் தொடர்ந்து சண்டை போடும் மீனா – வீட்டை விட்டு வெளியேறும் கதிர்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

முல்லைக்காக குடும்பத்தினர்கள் ரூ 5 லட்சம் வரைக்கும் செலவு செய்ததை அவ்வப்போது மீனாவும், மீனாவின் வீட்டினரும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்ததால் முல்லையின் அம்மா, கதிர் மற்றும் முல்லையை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்கு மருத்துவம் பார்த்த செலவை வைத்து தான் தற்போதும் வீட்டில் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். சிகிச்சைக்கு தேவையான 5 லட்சம் பணத்தை தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானையும் பாதியிலேயே நிறுத்தி எப்படியோ சிகிச்சையை செய்தனர்.

அமீர் மீது கொண்ட காதலை உறுதிபடுத்திய பிக் பாஸ் பாவ்னி – வைரல் வீடியோ! ரசிகர்கள் குஷி!

ஆனால், முல்லைக்கு இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் 5 லட்சம் பணத்தை வீணடித்து விட்டார் என மீனா முல்லை மீது கொலை வெறியில் இருக்கிறார். தற்போது வரைக்கும் முல்லைக்கு குடும்பத்தினர்கள் ரூ 5 லட்சம் செலவு செய்தது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. தற்போது மீனா செலவுக்காக குடும்பத்தினர்களிடம் பணம் கேட்டபோது எதற்காக இது மாதிரி எல்லாம் வீண் செலவு செய்து கொண்டிருக்கிறாய் என மூர்த்தி மீனாவை திட்டுகிறார்.

Exams Daily Mobile App Download

இதனால் கோபமான மீனா, முல்லைக்காக மட்டும் 5 லட்சம் செலவு செய்வீர்களா என கூறி சண்டை போடுகிறார். இது மட்டுமல்லாமல் ஜனார்த்தனன் மீனாவிற்கு ஆதரவாக என் பிள்ளைக்கு மட்டும் காசு தர யோசிக்கிறீர்கள் எனக்கூறி சண்டை போடுகிறார். இதனால் கடுப்பான முல்லையின் அம்மா மூர்த்தியின் வீட்டிற்கு சண்டை போட வருகிறார். பின்பு இவ்வளவு அவமானங்களுக்கு நடுவே இந்த வீட்டில் நீங்கள் இருவரும் இருக்க வேண்டுமா என முல்லையையும் கதிரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here