‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை இடிப்பதாக எச்சரிக்கும் அதிகாரி, அதிர்ச்சியில் கதிர் & ஜீவா – ப்ரோமோ ரிலீஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடையை இடிப்பதாக எச்சரிக்கும் அதிகாரி, அதிர்ச்சியில் கதிர் & ஜீவா - ப்ரோமோ ரிலீஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடையை இடிப்பதாக எச்சரிக்கும் அதிகாரி, அதிர்ச்சியில் கதிர் & ஜீவா - ப்ரோமோ ரிலீஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை இடிப்பதாக எச்சரிக்கும் அதிகாரி, அதிர்ச்சியில் கதிர் & ஜீவா – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடைக்கு பிரச்சனை எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக அதிகாரியை சந்திக்கிறார்கள் கதிர் மற்றும் ஜீவா. ஆனால் அந்த அதிகாரி கடையை இடிப்பதாக மிரட்டல் விடுப்பது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கதைக்களத்தில் புதிய வேகம் எடுத்திருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தி குடும்பத்திற்கு புதிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீனா மற்றும் ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட மோதல் காட்சிகள் வெளியான நிலையில் அது ரசிகர்களுக்கு போரடிக்க துவங்கியது. இந்நிலையில் மீண்டுமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் புதிய கடை பிரச்சனையை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன், தம்பிகள் இணைந்து பல்வேறு ஆசைகளுடன் கட்டிய புதிய மளிகை கடை சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி, அதிகாரிகள் சீல் வைத்து சென்றுள்ளனர். இப்போது கடையை மீட்க கதிர் மற்றும் ஜீவா இருவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கடை சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக கதிர், ஜீவா இருவரும் காரைக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வருகிறார்கள்.

அப்போது, அதிகாரியை சந்திக்கும் ஜீவா கடையை 2 நாளைக்கு முன்பு வந்து சீல் வைத்து விட்டு சென்றுவிட்டார்கள். என்னவென்று கேட்டால் உங்களிடம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என ஜீவா கூறுகிறார். அதற்கு, நீங்கள் கொடுத்த பேப்பர் எதுவும் சரியாக இல்லை. அதனால் தான் கடைக்கு சீல் வைத்திருக்கிறோம் என்று அந்த அதிகாரி திமிராக பதில் சொல்கிறார். இதை கேட்டு கோபமடையும் கதிர், அந்த அதிகாரியின் கையை பிடித்து பேப்பர் சரி இல்லை என்று சொல்கிறீர்கள். அது என்ன பேப்பர் என்று சொல்லுங்கள்.

BB Ultimate Promo | வனிதாவை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்! டாஸ்கை மதிக்காததால் பதிலடி!

எதையுமே சொல்லாமல் நாங்கள் எப்படி அதை சரி செய்ய முடியும் என்று தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்கிறார். அப்போது, கோபமடையும் அதிகாரி இங்கு நான் வைப்பது தான் சட்டம். என்னையே எதிர்த்து கேள்வி கேட்பாயா. உன் கடையை இடித்து தள்ளி விடுவேன் என்று எச்சரித்து இருவரையும் வெளியே துரத்தி விடுகிறார். இப்போது, கதிர் மற்றும் ஜீவா இருவரும் எப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை மீட்கப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here