கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
கர்ப்பமாக இருக்கும்
கர்ப்பமாக இருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முல்லை காவ்யா - போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி கர்ப்பமாக இருப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

நடிகை காவ்யா அறிவுமணி:

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்களிடம் நல்ல பிரபலமாக இருக்கின்றனர். பிரபல தொலைக்காட்சிகள் சீரியல்களில், மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு விறுவிறுப்பை அதிகப்படுத்துகின்றனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்படங்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்த நிலையில், சீரியல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருமணத்திற்கு பின் மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா – வைரல் போட்டோ!

பல சீரியல் நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். அதே போல பல போட்டோஷூட்கள் மற்றும் வெப் சீரியஸில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள காவ்யா அறிவுமணி கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் சீரியலில் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா? “மெகா சங்கமம்” ப்ரோமோ!

ஆனால் அது அவர் நடித்த Tom & Jerry என்ற பெயரில் ஒரு வெப் சீரியஸ் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல நடித்திருக்கிறார். அந்த வெப் சீரியஸ் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த முல்லை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வெப் சீரியஸ் எப்போது வெளியாகும் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here