விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் சுஜிதா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா அவர் தனது அம்மாவுடன் இணைந்து சமைத்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகை சுஜிதா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் ஒரு குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமே தனம் தான். அவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த அண்ணியாக நடிக்கிறார். தனமாக நடிகை சுஜிதா நடித்து வருகிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத்துறைக்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்து இருக்கிறார்.

கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”, மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம் – இன்றைய எபிசோட்!

அதன் பின் பல சின்னத்திரை சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார். ஆனால் இதுவரை பல சீரியல்கள் கொடுக்காத அந்தஸ்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்துள்ளது. அவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட வேறு மொழிகளிலும் முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவருடைய குடும்பம் பற்றிய வீடியோக்களையும், உடல் எடை குறைப்பு டிப்ஸ்களை கொடுத்து வீடியோ பதிவிடுவார்.

பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் தற்போது தனது அம்மா உடன் இணைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் விரைவாக மீன் சமைப்பது எப்படி என்பது குறித்து அந்த வீடியோவில் இருக்கிறது. வீட்டிலேயே மசாலா அரைத்து அவரது அம்மா வைக்கும் கேரளா முறை மீன் குழம்பு வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் அவரது வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் ரசித்து சாப்பிடுவதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!