‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக நடித்து வரும் நடிகர் குமரன் சீரியல் படப்பிடிப்பின் போது சக நடிகர், நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட அவை வைரலாகி வருகிறது.

நடிகர் குமரன்

தமிழ் சின்னத்திரையில் ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி தற்போது சிறந்த சீரியல் நடிகராக உருவாகி இருப்பவர் நடிகர் குமரன். ஆரம்பத்தில் சினிமா திரைப்படங்களில் நடிப்பதற்கு முயற்சித்து வந்த நடிகர் குமரனுக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் ஒரு நடன கலைஞராக அறிமுகமானார். இதில் கிடைத்த வரவேற்புகளை அடுத்து விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Vijay TV Bigg Boss 5 Promo | பிரியங்கா சொன்ன அந்த ஒரு விஷயம், அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த சீரியலை பொறுத்தளவு ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் பல வகையான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் எந்தவொரு விஷயத்தையும் சரிவர வெளிக்காட்டாத ஒரு இருக்கமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தவிர ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் கதாப்பாத்திரம் இவருக்கு ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி தந்திருக்கிறது.

ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் குமரன் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கயல் பாப்பாவுடைய காது குத்து விழாவில் எடுத்துக்கொண்ட சில படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில் நடிகர் குமரனுடன், நடிகர் சரவண விக்ரம், நடிகை சுஜிதா மற்றும் காவ்யா ஆகியோர் இடம்பெறுள்ளனர். மிகவும் உற்சாமாக இந்த புகைப்படங்களில் தோற்றமளித்திருக்கும் நடிகர் குமரனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here