விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிருடன் இணைந்த கண்ணன் - வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிருடன் இணைந்த கண்ணன் - வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!

நீண்ட நாட்கள் கழித்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணைந்துள்ள கண்ணன் அதாவது நடிகர் சரவண விக்ரம், நடிகர் குமரனுடன் இணைந்து செய்துள்ள ரீசன்ட் ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் வீடியோ

மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடந்த சில எபிசோடுகள் பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள, அவரை குடும்பத்தில் இருந்து அடித்து துரத்தி விடுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறியவுடன் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் கண்ணனை, மூர்த்தியின் வீட்டுக்கு எதிரே குடி வைக்கிறார் கஸ்தூரி.

சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

என்றாலும் தனது வீட்டுக்குள் உரிமையுடன் செல்ல முடியாமல் வருத்தப்பட்டு வந்த கண்ணன், ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு மீண்டுமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அதுவும் தனம் வந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை தன்னுடன் அழைத்து செல்வது போல வெளியான எபிசோடுகள் எல்லாம் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 50 எபிசோடுகளுக்கும் மேலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கண்ணன் தனது அண்ணன், அண்ணிகளுடன் இணைந்திருக்கிறார்.

குழந்தைக்கு தாயான ‘பாரதி கண்ணம்மா’ பரினா படக்குழுவினருக்கு வேண்டுகோள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் இந்தவாறு நகர்ந்து வர, நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் ஒன்று சேர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்ணன் மற்றும் கதிர், அதாவது நடிகர் சரவண விக்ரம் மற்றும் குமரன் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து நடிகர் சரவண விக்ரம் மற்றும் குமரன் இருவரும் மதுரை முத்துவின் நகைச்சுவை ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வலைதளத்தில் பதிவிட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!