“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல கதாபாத்திரங்கள் நடித்து வந்தாலும் முல்லை கதிர் ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் படப்பிடிப்புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரையில் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கதையுடன் ஒன்றி பல கதாபாத்திரங்கள் நடித்து வரும் நிலையில் கதிர் முல்லை கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார். பிடிக்காமல் திருமணம் செய்துக் கொண்ட இருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றியே அழகான காட்சிகளுடன் முதலில் காட்டப்பட்டது.

கோபி படத்திற்கு வராததை நினைத்து கோவப்படும் ஈஸ்வரி, எழில் சொன்னதை சொல்லும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதன் பின் முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி களமிறங்கினார். திருமணத்திற்கு பின் நடக்க இருக்கும் காதல் காட்சிகளை பற்றி அழகான கதையுடன் இந்த கதாபாத்திரம் கொண்டு செல்லப்படுகிறது. சென்ற வாரம் முதல் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை தெரிய வர குடும்பமே அதை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு மூலமாக குழந்தை பிறக்க வைக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதனால் புது வீடு கட்ட போட்ட திட்டத்தை தள்ளி வைக்க அதனால் மீனா வருத்தமாக இருக்கிறார். இந்நிலையில் முல்லையாக நடித்துவரும் காவ்யாவிற்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தலத்தில் கேக் வெட்டி அனைவரும் கொண்டாடி இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முல்லை, கதிர், ஜீவா, மீனா, தனம் என அனைவரும் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!