பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன மீனா!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன மீனா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன மீனா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன மீனா!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா மற்றும் ஹேமா சதீஸ் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் முல்லையாக நடித்து வரும் காவ்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி பெற்ற சீரியல் கதையின் தமிழ் மொழியாக்கம் ஆகும். கூட்டு குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். கதையுடன் ஒன்றி அவர்கள் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித் தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் முல்லை கதாபாத்திரத்திற்கும் மீனா கதாபாத்திரத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட் எண்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவரா? ரசிகர்கள் ஷாக்!

முல்லை கதிர் காதல் காட்சிகளுக்கும், குடும்பத்திற்காக முல்லை விட்டுக் கொடுக்கும் விஷயங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மீனா கதாபாத்திரமும் நகைச்சுவை வில்லியாக காட்டப்படும் நிலையில் மீனா கதாபாத்திரத்திற்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். முதலில் முல்லையாக நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் மறைவிற்கு பின் முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார். அவர் அப்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதால் குடும்பமே வருத்தப்படுகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. முல்லையாக நடித்து வரும் காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி ஹேமா சதீஸ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். மேலும் முல்லை ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here