கதறி அழும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

0
கதறி அழும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா - வைரலாகும் வீடியோ!
கதறி அழும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா - வைரலாகும் வீடியோ!
கதறி அழும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கண்ணன் நடிகர் சரவண விக்ரம் காதல் தோல்வியால் கதறி அழும் போது விஜே தீபிகா அவரை சமாதானம் செய்வது போல வெளியாகி இருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீப காலமாக ரசிகர்களுக்கு சற்று போரடிக்க துவங்கி இருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களத்தில் தற்போது சண்டை, மோதல் என சில காட்சிகள் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது ஐஸ்வர்யாவின் வருகையால் சிறிய சிறிய பிரச்சனைகள் எழ ஆரம்பித்திருக்கிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” ராகுல் தாத்தா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அதாவது, ஐஸ்வர்யா செய்யும் சில செயல்கள் மீனாவுக்கு பிடிக்காமல் போக, இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு விதமான மோதல்கள் எழுந்திருக்கிறது. இப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி கொண்டு தவிப்பது கண்ணன் தான். இந்த தொடரில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர்கள் நடிகர் சரவண விக்ரம் மற்றும் நடிகை சாய் காயத்ரி. தற்போது நடிகை சாய் காயத்ரி நடித்து வரும் இந்த ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் இதற்கு முன்பாக நடித்திருந்தவர் விஜே தீபிகா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சில காலம் மட்டும் ரீல் ஜோடியாக நடித்து வந்த சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவருக்கும் மக்கள் எக்கச்சக்கமான வரவேற்புகளை கொடுத்து வந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகிய விஜே தீபிகா, இப்போது நடிகர் சரவண விக்ரமுடன் சேர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என ஒவ்வொன்றையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் – வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!

இப்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து, காதல் தோல்வியடைந்த ஒரு நகைச்சுவை வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் காதல் தோல்வி அடைந்த சரவண விக்ரமை விஜே தீபிகா தேற்றுவது போல சில காட்சிகள் இடம்பிடித்திருந்தது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here