விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – சூரத் பயணம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா - சூரத் பயணம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – சூரத் பயணம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து சூரத்திற்கு சென்று இருக்கிறார். அங்கே ஹோட்டல் ரூம் குறித்த விமர்சனம் பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை ஹேமா சதீஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது TRPயில் போட்டி போடும் குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். மூத்த அண்ணியாக தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதாவும், மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்டாலின் முத்து, ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட், மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா சதீஸ், கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் குமரன், முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இந்நிலையில் மீனாவாக நடித்து வரும் ஹேமா பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியது. அவர் இந்த சீரியலில் பல வில்லத்தனங்களை செய்தாலும் கடைசியில் குடும்பத்திற்கு எதாவது பிரச்சனை என்றால் அவர் தான் முதலில் நிற்கிறார். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் சீரியல் கதைக்கு முக்கியமானதாக இருக்கிறது. சீரியலில் அவர் நடித்தாலும் தனியாக யூடுப் சேனல் ஒன்றை அவர் நடத்தி வருகிறார். அதில் பல வீடியோக்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்து இருக்கிறார்.

மது அருந்தியவர் போல் நடிக்க “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்!

இந்நிலையில் அவர் சீரியல் படப்பிடிப்புகளில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு சூரத் சென்று இருக்கிறார். அது குறித்த பயண வீடியோவும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். மேலும் சூரத் ஹோட்டல் குறித்த விமர்சனங்களையும், ஹோட்டல் வாடகை குறித்தும் ஓப்பனாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் சூரத் உணவுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அவர் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!