பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவின் மகனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவின் மகனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவின் மகனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவின் மகனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது மகனுடன் ஹேமா சேர்ந்து இருக்கும்படியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் இவ்வளவு பெரிய மகனாகிவிட்டனா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வரை முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை எடுத்தே கடந்த ஒரு மாத காலமாக ஓட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போது முல்லைக்கு அந்த சிகிச்சை தோல்வியடைந்துவிட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் போது மீனா மட்டும் தான் சண்டை போட்டு கொண்டிருப்பார்.

சித்ராவை காதலிப்பதாக ஏமாற்றி கொலை செய்த ஹேம்நாத் – கதறும் பெற்றோர்கள்! ரசிகர்கள் ஷாக்!

டிஆர்பியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் ஹேமா என்பவர் நடித்துக்கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே எக்கச்சக்க திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்தது போக மீதி நேரம் முழுவதையும் ரசிகர்களுடன் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருக்கிறார். ஷூட்டிங்கில் இவருக்குக் கொடுக்கப்படும் உணவிலிருந்து ஷூட்டிங்கில் எந்த எந்த மாதிரியான படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன என அனைத்தையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Exams Daily Mobile App Download

இதுமட்டுமல்லாமல் இவர் மேற்கொள்ளும் வெளியூர் பயணம், விதவிதமான ஹோட்டல்களிலிருந்து உணவுகளை வாங்கி அதற்கு ரேட்டிங் கூறுவது என பல வகையான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தான் மீனாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன் சாத்விக்குடன் இருக்கும் படியான வீடியோக்களையும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். ஹேமாவின் மகனா இது அதற்குள் இவ்வளவு பெரிய மகனாக வளர்ந்து விட்டாரே என ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!