விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் நடிகை ஹேமாவின் சினிமா மற்றும் சின்னத்திரை பயணம் குறித்து ஒருவரும் அறிந்திராத சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை ஹேமா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் லட்சக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் ஆன சீரியலாக இருந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்புக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்திருப்பது இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் தான். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற நகைச்சுவையான வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. தற்போது 31 வயதான நடிகை ஹேமா ஆகஸ்ட் 19, 1991ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர்.

சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை – ரசிகர்கள் வாழ்த்து!

இவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்கு தான். இவர் தனது பள்ளிப் படிப்பை செயின்ட் பால் பள்ளியில் முடித்திருக்கிறார். அதே போல மயிலாடுதுறையில் உள்ள AVC கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது கணவர் சதீஷ் ஒரு குறும்பட இயக்குனர். சிறிய வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஹேமா, சின்னத்திரையில் ஒரு விஜேவாக அறிமுகமானார். தொடர்ந்து சில டிவி சேனல்களில் ஆங்கராக பணியாற்றி வந்த ஹேமாவுக்கு ‘ஆபிஸ்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஒரு நெகடிவ் ரோலில் நடித்திருந்த ஹேமா சன் டிவியின் பொன்னூஞ்சல், தென்றல், குலதெய்வம் போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து ஜீ தமிழின் ‘மெல்ல திறந்தது கதவு’ விஜய் டிவியின் களத்துவீடு, சின்னத்தம்பி போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் விஷாலின் ‘பாயும் புலி’ என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான ஹேமா, ஆறாது சினம், சவரக்கத்தி, இவன் யாரென்று தெரிகிறதா போன்ற திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார். சீரியல்கள் தான் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று தந்திருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரம் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!