விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து தற்போது தனது குழந்தை உடன் பாண்டிச்சேரி பீச் சென்று இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில் கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹேமா மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்பத்தில் இரண்டாவது மனைவியாக இருக்கும் அவர் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தாலும் குடும்பத்தின் ஒற்றுமை குறையாமல் அவர் பார்த்துக் கொள்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி? புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எதாவது பிரச்சனை என்றால் அதில் மீனா தான் முதலில் வந்து தீர்த்து வைப்பார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையின் இரண்டாவது முக்கிய கதாபாத்திரமாக மீனா கதாபாத்திரம் இருக்கிறது. இந்நிலையில் அவர் தனியாக ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிட்டு இருக்கிறார்.

‘பிக் பாஸ்’ தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இதுவரை 7 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பரபரப்பான பட பிடிப்புகளுக்கு நடுவே சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து தனது மகனுடன் பாண்டிச்சேரி பீச் சென்று இருக்கிறார். அது குறித்த வீடியோவை அவர் வெளியிட்ட நிலையில் அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக யூடுப் சேனல்கள் வதந்திகளை பரப்பி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை தொடர்ந்து சீரியலில் மீனாவாக அவர் நடிப்பார் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here