குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

0
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - வைரலாகும் வீடியோ!
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - வைரலாகும் வீடியோ!
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து கொண்டிருக்கும் தனம் தனது குழந்தைகளுடன் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகளோடு குழந்தையாகவே மாறி குதித்து விளையாடும்படியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குதித்து விளையாடிய தனம்:

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழி சீரியல்களில் சுஜிதா நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணியாக தனம் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் எக்கச்சக்க திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விளம்பர திரைப்படங்களில் கூட நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் சுஜிதாவிற்கு மிக பெரிய அளவில் பேரையும் புகழையும் கொடுத்தது.

மரண படுக்கையில் இருக்கும் ராமமூர்த்தி, திருந்துவாரா கோபி? “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வரும் எபிசோட்!

இப்படி பிஸியான வாழ்க்கையிலும் சமூக வலைப்பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். கதைகேளு கதைகேளு என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் திறம்பட வைத்து நடத்தி வருகிறார். அந்த யூடியூப் பக்கத்தில் மக்களுக்கு தேவையான பல பயனுள்ள கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டைகள், வெளியூர் பயணம் என அனைத்தையும் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். யூடியூப் பக்கத்தில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிக அளவில் ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார்.

தற்போது ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது சுஜிதாவின் மகன்களோடு இணைந்து டிராம்போலைன் பார்க்கிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஜிம்னோஸ்டிக் செய்யும் ரப்பர் போல் உள்ள திரையில் ஜாலியாக குழந்தைகளோடு சேர்ந்து குதித்து விளையாடுகிறார். குழந்தையோடு குழந்தையாக மாறிவிட்டார் போல என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!