சீரியலில் கட்டும் சேலை கலெக்சன் வீடியோ போட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா – குவியும் லைக்குகள்!
சின்னத்திரையில் மாபெரும் புது கான்செப்ட் சீரியல், நிகழ்ச்சிகளையும் கொடுத்து வரும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஹிட் சீரியலை ஒளிபரப்பி வருகிறது. அந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவின் சேலை கலெக்சன் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
அந்த காலத்தில் பலர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது நாகரீக வளர்ச்சியால் கூட்டு குடும்பத்தை பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. கூட்டு குடும்பத்தின் சந்தோசங்களை மையப்படுத்தி காட்சிகளை ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் ஒரே குடும்பமாக இருக்கின்றனர். ஆனால் கதையின் ஆணி வேராக தனம், மூர்த்தி கதாபாத்திரம் தான் இருக்கின்றனர்.
விஜய் டிவி சீரியல்களை துவம்சம் செய்த ‘கயல்’ – TRP ரேட்டிங் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
தனமாக நடிகை சுஜிதா நடித்து வருகிறார். அவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நல்ல கம்பேக் கொடுத்தார். இந்த குடும்பத்தின் ஒற்றுமை போகாமல் இருக்க தனம் கதாபாத்திரம் தான் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகை சுஜிதா சீரியலுக்கு முன்னதாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
Exams Daily Mobile App Download
‘கதை கேளு கதை கேளு’ என்ற சேனலில் அவர் புதுமையான பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தற்போது சீரியலில் அவர் கட்டி இருக்கும் சேலைகளை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பலர் சேலையை பார்ப்பதற்காகவே சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பல பெண் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.