“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் குமரன் திருமண வீடியோ – குவியும் லைக்குகள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் கதிர் குமரன் திருமண வீடியோ - குவியும் லைக்குகள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் குமரன் திருமண வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் அவர்களின் திருமண வீடியோ ஒன்றை அவரது மனைவி சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் குமரன்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ஒரு சீரியல் ஆகும். வழக்கமான சீரியல்களில் வருவது போல இல்லாமல் இந்த சீரியலில், வில்லி பழி வாங்குதல் போன்ற எந்தவித நெகட்டிவ் காட்சிகளும் வருவதில்லை. அதுவே இந்த சீரியலை மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிகை சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலால் ஏகப்பட்டதை இழந்த அஞ்சலி கண்மணி – அவரே அளித்த பேட்டி! ரசிகர்கள் ஷாக்!

தொடக்கம் முதல் சாதாரண குடும்பத்தில் நடிக்கும் சுக துக்கங்களை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட அண்ணன் தம்பிகள் கஷ்டப்பட்டு போராடி கடையை திறந்து வைத்தனர். இந்நிலையில் சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். குமரன் நடிகை சுஹாசினியின் கணவர். அவர் நடிப்பு மட்டுமில்லாமல் நன்றாக நடனம் ஆட கூடியவர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தன்னுடன் ஜோடி சேர்ந்து ஆடிய சுஹாசினியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். சின்னத்திரையில் சாக்லேட் பாய்யாக வலம் வரும் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் முல்லையுடன் செய்யும் காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் குமரன் சுஹாசினி திருமண வீடியோவை சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது குமரன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!