இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! குஷியில் ரசிகர்கள்!

0
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை - அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! குஷியில் ரசிகர்கள்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை - அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! குஷியில் ரசிகர்கள்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! குஷியில் ரசிகர்கள்!

இயற்கையாக முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர் கூறியதை தொடர்ந்து முல்லை இயற்கையாக கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்கிற விவகாரம் தான் ரசிகர்களின் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற விஷயத்தை அறிந்து முல்லையை விட ரசிகர்கள் தான் அதிகமாக வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக மட்டுமே கருவுற முடியாது. செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால், தன்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்று கொடுக்க முடியவில்லை என குற்ற உணர்ச்சியில் முல்லை மிகவும் ஏங்குகிறார். பின்பு, செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் என்பதால் என்ன செய்வது என குடும்பத்தினர்கள் அனைவரும் யோசிக்கிறார்கள். முல்லைக்கு குழந்தை பிறப்பது தான் முக்கியம் என நினைத்து மூர்த்தி வீடு கட்டும் பிளானை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம். குழந்தை பிறந்த பிறகு மேற்கொண்டு வீட்டு வேலைகளை கவனிக்கலாம் என கூறிவிடுகிறார். ஆனால், மீனாவிற்கு அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் விட்டு கொடுக்க முடியாது என கூறி சண்டை போடுகிறார்.

Jio, Airtel & Vi வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

பின்பு ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார். எப்படியும் இவர்கள் செயற்கை முறை கருவுறுதலுக்கு காசு கொடுக்கப் போவதில்லை என நினைத்து பரிகாரம் செய்கிறார். பரிகாரத்திற்கு பின்பு முல்லை இயற்கையாகவே கருவுறுகிறார். இதுமட்டுமல்லாமல் முல்லையும், கதிரும் ஆசைப்பட்டபடி இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here